ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் திரவ் தயாரிப்பில், பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில், எம்.எஸ்.பாஸ்கர், திரவ், இஸ்மத் பானு, ரமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வெப்பம் குளிர் மழை.
நாயகன் திரவ் மாடுகளுக்கு சினை ஊசி போடும் வேலை பார்க்கிறார். அவருக்கும் கதாநாயகி இஸ்மத் பானுவுக்கும் திருமணம் நடந்து 5 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை இல்லாமல் இருக்கின்றனர்.
ஊர் மக்கள் எப்போதும் இஸ்மத் பானு திரவு தம்பதிக்கு குழந்தை இல்லை என்பதை சுட்டிக்காட்டியே குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் பேச்சால் கஷ்டப்படும் இஸ்மத் பானு திரவிடம் சொல்லி சம்மதிக்க வைத்து மருத்துவமனைக்கு செல்கிறார்கள், என்ன பிரச்சனை என்று தெரிந்து கொள்ள.
அதன்படி இருவரையும் பரிசோதித்த பிறகு பிரச்சனை திரவுக்குத் தான் என்று தெரிய வருகிறது. இஸ்மத் பானு இந்த விஷயத்தை கணவரிடம் சொல்லாமல் மறைப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தையின்மை பிரச்சனையால் தன்னுடைய கணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதால் ஒரு முடிவெடுக்கிறார்.
பிறகு அவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது. குழந்தை பிறந்ததில் குடும்பமே மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்கிறார்கள். சில வருடங்கள் கழித்து ஒரு உண்மை திரவுக்கு தெரிய வர பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் திரவ், இஸ்மத் பானுவை வெறுக்கிறார்.
அந்த பிரச்சனை என்ன மீண்டும் இஸ்மத் பானுவும் திரவும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே ‘வெப்பம் குளிர் மழை’ படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் : பாஸ்கல் வேதமுத்து
தயாரிப்பு : ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் திரவ்
இசையமைப்பாளர் : ஷங்கர்
ரங்கராஜன்
எடிட்டர் : திரவ்
ஒளிப்பதிவாளர் : பிருத்வி ராஜேந்திரன்
ஒலி வடிவமைப்பாளர் : ஆனந்த், திரவ், அருண்
சண்டைக்காட்சிகள் : ஸ்டன்னர் சாம்
கலை இயக்குனர் : பாலச்சந்தர்
ஆடை : கீர்த்தனா
பாடல் வரிகள் : திரவ்
D. I. : ஸ்ரீகாந்த் ரகு
மக்கள் தொடர்பு : D’one