திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்ட வெங்கையா நாயுடு

குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பீகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்க்கு ஆதரவு திரட்டும் நோக்கில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவு கோரினார். முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக பேசிய வெங்கையா நாயுடு, வரும் 23ல் ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நிகழ்வுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.