ராகுல் அசோக் இயக்கத்தில், அபர்னதி, ஜான்விஜய், இளவரசு, லிவிங்ஸ்டன், காளி வெங்கட், ஒய் ஜி மகேந்திரன், சுரேஷ் சக்கரவர்த்தி, சரவண சுப்பையா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வெஞ்சன்ஸ்.
நாயகி அபர்னதி சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போது தன்னுடைய வேணி என்கிற பெயரை தன் கூட படிக்கும் தோழிகளுக்கு கூட தெரியவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அவருடைய தந்தையாக இருக்கும் காளி வெங்கட் நீ நன்றாக படித்து மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தால் உன்னை இந்த மாநிலமே போற்றும் என்று சொல்கிறார்.
அதனால் அவர் நன்றாக படித்து முதல் மதிப்பெண்ணும் எடுத்து விடுகிறார் மாநிலம் முழுவதும் அவரது பெயர் கேட்கிறது. ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு அதனை மறந்துவிட்டு அவர்கள் அனைவரும் வேறு வேலையை பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.
இதனை அபர்னதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்பொழுதும் அனைவரும் தன்னை பற்றிய பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் நன்றாக படித்து பிளஸ் டூ விலும் முதலிடம் பிடித்து ஐஏஎஸ் படித்து அதிலும் முதலிடம் பிடித்து கலெக்டராக ஆகிறார்.
கலெக்டர் ஆனவுடன் பல நல்ல காரியங்களை செய்து மக்களிடையே நல்ல பெயர் எடுத்து தினமும் தன்னுடைய பெயர் பத்திரிகைகளில் வரும்படி நடந்து கொள்கிறார் அபர்னதி.
இப்படி பல காரியங்களை தொடர்ச்சியாக செய்து வரும் அபர்னதிக்கு ஆளும் கட்சியால் பெரும் பிரச்சனையை ஏற்படுகிறது. அபர்னதியின் மீது ஒரு பெரும் குற்றச்சாட்டு ஏற்படுகிறது. அந்த குற்றச்சாட்டை அபர்ணதி சரி செய்தாரா? இல்லையா? ஆளுங்கட்சியின் பிரச்சினையிலிருந்து மீண்டாரா? இல்லையா? என்பதே வெஞ்சன்ஸ் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : ராகுல் அசோக்
தயாரிப்பு : ஏசி ப்ரொடக்ஷன்ஸ்
இசை : கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு : எம் எஸ் பிரபு
படத்தொகுப்பு : இம்ரான்
பின்னணி இசை : அருண்ராஜ்
மக்கள் தொடர்பு : நிகில்முருகன்

