வெள்ளக்குதிர விமர்சனம்

சரண் ராஜ் செந்தில் குமார் இயக்கத்தில், ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வெள்ளக்குதிர.

நாயகன் ஹரீஷ் ஓரி தான் வசித்து வந்த ஊரில், ஒரு பெரிய பிரச்சினை செய்து விட்டு, அதிலிருந்து தப்பிக்க ஊரை காலி செய்து அன்று இரவே வேறு இடத்தில் மலை உச்சியில் கிராமத்திற்கு தன்னுடைய மனைவி மகனுடன் செல்கிறார்.

இனி எந்த பிரச்சனைக்கும் போக மாட்டேன், திருந்தி வாழ்கிறேன் என்று மனைவியிடம் சத்தியம் செய்கிறார்.

அந்த மலை கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்திருந்தாலும் அங்கு அத்தியாவசிய தேவைகள் எதுவும் இல்லாததால் மலையிலிருந்து பலரும் கீழே சென்று வாழ்கின்றனர். 

அதனால் தற்போது அங்கே வரும் 40 குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். 

அந்த மலை கிராமத்தில் யாருக்கும் பெரிதாக படிப்பறிவு இல்லாத காரணத்தால் அங்கு இருக்கும் விவசாய நிலங்களை அந்த ஊரில் இருக்கும் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் மக்களை ஏமாற்றி வாங்குவதையே வேலையாக கொண்டிருக்கிறார்.

அந்த கிராமத்திற்கு வந்த சில நாட்களிலேயே ஹரிஷ் ஓரி அந்த கிராமத்திற்கு தேவையில்லாத ஒரு விஷயத்தை செய்துவிடுகிறார். அதனால் அந்த கிராமத்திற்கு என்ன நடந்தது? ஹரிஷ் ஓரி அப்படி என்ன செய்தார்? என்பதே வெள்ளக்குதிர படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து மற்றும் இயக்கம் : சரண்ராஜ் செந்தில்குமார் 

தயாரிப்பு : ஹரிஷ் ஓரி

தயாரிப்பு நிறுவனம் : நிஜம் சினிமாஸ்

இசை : பரத் ஆசிகவன்

ஒளிப்பதிவு : ராம்தேவ் 

படத்தொகுப்பு பிரதீப் & சரண்ராஜ் செந்தில்குமார்

வசனம் : ஆனந்தன் & சரண்ராஜ் செந்தில்குமார் 

மக்கள் தொடர்பு : சாவித்திரி