இண்டஸ் கிரியேஷன்ஸ் மற்றும் டெண்ட்கொட்டா இணைந்து தயாரிக்க, விவேக் இளங்கோவன் இயக்கத்தில் சின்ன கலைவாணர் விவேக் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் “வெள்ளைப்பூக்கள்”.
இண்டஸ் கிரியேஷன்ஸ் கடந்த 2005ம் ஆண்டு, அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள துறைமுக நகரமான சியாட்டிலில், ஓர் ஊடகம், கலை-பண்பாட்டு குழுமமாக உதயமானது. இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து, அமெரிக்க பெருநிறுவனங்களான மைக்ரோசாப்ட், அமேசான், கூகுள், முகநூல் போன்றவற்றில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் ஆகியோர்களால் இந்திய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அங்கு பின்பற்றவும், வளர்க்கவும், மேலும் இந்தியாவில் உள்ள கலை துறை சார்ந்த நண்பர்களுக்கு உதவுவதற்காகவுமே இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இண்டஸ் குழுமம் தங்களது பல்வேறு நாடக நிகழ்ச்சிகள், மற்றும் திரைப்பட தயாரிப்புகள் மூலமும் இந்திய ரூபாய் சுமார் இரண்டு கோடி அளவிற்கு நிதி திரட்டி, இந்தியாவின் மீது சிறப்பு கவனம் செலுத்தும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு உதவி புரிந்திருக்கிறது.
இக்குழுமம், தற்போது வரையில், சுமார் பத்து பெரிய நாடக நிகழ்ச்சிகளும், எண்ணிலடங்கா குறும்படங்களும் தயாரித்துள்ள நிலையில், அவற்றில் சில சர்வதேச திரைப்பட விழாவிலும் பங்கேற்று விருதுகள் வென்று சிறப்பு சேர்த்துள்ளன. இக்குழும தயாரிப்பில் வெளிவந்த ‘நவம்’ எனும் குறும்படம், “பே ஏரியா திரைப்பட சங்கம்” நடத்திய குறும்பட போட்டியில் வெற்றி பெற்றது. இதற்கிடையே “ஓடம்” பல்வேறு சர்வதேச திரைப்பட விருதுகளை வென்றுள்ளது.
இக்குழுமத்தின் மிகச் சிறந்த படைப்புகளில் சில உங்கள் பார்வைக்காக: அரண்மனை சிறுவயலில்(2006), கடவுள் வந்திருந்தார்(2007), ரகசிய சிநேகிதியே(2008), லண்டன் எக்ஸ்பிரஸ்(2009), இரு லைவ்ஸ் ஒரு ஸ்டோரி(2010), சக்ரவியூகம்(2011), உள்ளே வெளியே(2012), நினைத்தாலே நடக்கும்(2014), சிதம்பர ரகசியம்(2015), செவ்வாதோஷம்(2017), ஓடம்(2018), நரிவேட்டை(2018) மற்றும் நவம்(2018).
இண்டஸ் கிரியேஷன்ஸ் தங்களது முதல் கோலிவுட் தயாரிப்பாக “வெள்ளைப்பூக்கள்” திரைப்படத்திற்காக, டென்ட் கொட்டாவுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறது.
“தமிழ்நாட்டிலிருந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ருத்ரன், அமெரிக்காவில் வசிக்கும் தனது மகனுடன் நேரம் செலவிட முடிவு செய்கிறார். அங்கு அவர் தனது மருமகளை சந்திக்கிறார், மேலும் அங்கு பல்வேறு வகையான சுவாரஸ்யமான மனிதர்களையும் சந்தித்து அவர்களுடன் நண்பர்களாகிறார்.
வெளித்தோற்றத்தில் வரவேற்புமிக்க அமைதியான இடமாக தோன்றும் வசிப்பிடத்தில், திடீரென ருத்ரனை சுற்றியுள்ள மக்கள் மாயமாகி இறந்துவிட்டதாக கருதப்படுகின்றது.
தொடர் கொலைகாரனை அடையாளம் காண போலீஸ் மூளையை பயன்படுத்தி தனது சொந்த விசாரணையைத் தொடங்குகிறார் ருத்ரன்.
கொலையாளி யார்? கொலைகளுக்கு காரணம் என்ன? என பல புதிர்களுக்கான விடைகளை ருத்ரன் வெளிக்கொண்டு வந்தாரா என்பதே “வெள்ளைப்பூக்கள்” திரைப் படத்தின் சுவாரஸ்யமிக்க கதை.
இத்திரைப்படத்தில் நடிகர் விவேக், சார்லி, ‘மயக்கம் என்ன’ பூஜா தேவரியா, தேவ், ஹாலிவுட் நாயகி பெய்ஜ் ஹென்டர்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
டிரைடண்ட் ஆர்ட்ஸ் இப்படத்தை ரீலிஸ் செய்கிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:
தயாரிப்பு – திகா சேகரன், வருண் குமார், அஜய் சம்பத்
இயக்கம் – விவேக் இளங்கோவன்
ஒளிப்பதிவு – ஜெரால்ட் பீட்டர்
இசை – ராம்கோபால் கிருஷ்ணராஜு
படத்தொகுப்பு – பிரவீன் KL
பாடல்கள் – மதன் கார்க்கி
சவுண்ட டிசைனர் – குனால் ராஜன்
கலரிஸ்ட் – பாலாஜி கோபால்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்