Skyman Films International கலைமகன் முபாரக் தயாரித்து, கவின் இயக்கத்தில், பிக்பாஸ் முகேன் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் ஒரு பகுதியாக தானும் இருப்பதில், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் வெகு உற்சாகமாக இருக்கிறார். நடிகை மீனாக்ஷி ஏற்கனவே தனது அற்புதமான தோற்றத்தில், இளைஞர்களின் இதயங்களை வென்றுள்ளார். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு விதமான கதாபாத்திரங்களுக்கும் அட்டாகாசமாக பொருந்தக்கூடிய தனித்தன்மையான தோற்றப்பொலிவை ஜோதிகா, நஸ்ரியா நஷீம் போன்ற வெகு சில ஹீரோயின்களே பெற்றிருந்தனர், அந்த வரிசையில் அவர்களுக்கடுத்து ஒரு வலுவான இடத்தை பெற்றுள்ளார் நாயகி மீனாக்ஷி. அவரது நடிப்பில் வரவிருக்கும் “வேலன்” திரைப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், திரைத்துறையில் பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தங்கள் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களில் அவரை நடிக்க வைக்க விரும்புகின்றனர்.
இது குறித்து நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் கூறுகையில்..,
“ வேலன் திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் அழகான விதத்தில் சொன்னது தான். குடும்பத்துடன் இருக்கும்போது எப்போதுமே ஒருவர் சிறந்த நிம்மதியான மனநிலையுடன் சந்தோஷமாக இருப்பார்கள். இதை நான் ‘வேலன்’ குழுவுடன் பணிபுரியும் போது ஆத்மார்த்தமாக உணர்ந்தேன். அவர்கள் என்னைத் தங்கள் சொந்தக் குடும்ப உறுப்பினராகவே நடத்தினார்கள். வேலன் போன்ற நல்ல குடும்ப பொழுதுபோக்கு திரைக்கதையை ஊக்குவித்ததோடு, அதில் என்னையும் ஒரு அங்கமாக்கிய தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் சாருக்கு நன்றி. பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில்தான் நடிகைகள் அதிக மதிப்பையும், கவனத்தையும் பெறுகிறார்கள் என்ற கருத்து இருந்தாலும், ‘குடும்ப படங்கள்’தான் அவர்களின் சிறப்பான குணாதியசத்தை வெளிப்படுத்துவதாக நான் நம்புகிறேன். குடும்பம் என்பது ஆண்கள் மற்றும் பெண்களின் பண்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று, அங்கு அவர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பு, ஆரோக்கியமான குடும்பத்திற்கு வழி வகுக்கும். அதேபோல், ஆண் மற்றும் பெண் நடிகர்கள் எப்போதும் குடும்ப திரைப்படங்களில் சமமான அளவில், முக்கிய கதாபாத்திரங்களைக் பெறுகிறார்கள். இந்த படத்தில் ஒரு அழகான கதாபாத்திரத்தில் நடிகக் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. முகேன் மிகவும் இனிமையான மனிதர். அவரது தொழிலின் அர்ப்பணிப்பு தாண்டி, அவர் ஒரு நல்ல உள்ளம் கொண்டவர். படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகுவார். குடும்ப பார்வையாளர்கள் விரும்பும் வகையில் ஒரு அழகான கதையை கவின் வடிவமைத்துள்ளார். தனிப்பட்ட முறையில், ஒரு ரசிகர் என்ற வகையில், இந்தக் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்தை, திரையரங்குகளில் காண ஆர்வமாக காத்திருக்கிறேன். குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் சொல்லும் அழகான படைப்பாக வேலன் இருக்கும்.
வேலன் திரைப்படத்தை இயக்குநர் கவின் எழுதி இயக்கியுள்ளார், Skyman Films International சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். கோபி சுந்தர் இசையமைக்க, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், K.சரத்குமார் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். D.பாலசுப்ரமணியன் (கலை), மகேஷ் மேத்யூ (ஸ்டண்ட்), தினேஷ்-விஜி சதீஷ்-ராதிகா (நடன அமைப்பு), சபா டிசைன்ஸ் (பப்ளிசிட்டி டிசைன்ஸ்), ததாஷா A பிள்ளை-K. ராஜன் (ஆடைகள்), V.சித்தரரசு (ஸ்டில்ஸ்), சந்திரன் பச்சமுத்து-சவரிமுத்து-கவின் (வசனம்), D.உதயகுமார் (ஒலி வடிவமைப்பு), ஹரிஹரசுதன் (VFX), N.சக்திவேல் (ஒப்பனை), N.A.அன்பரசு (இணை இயக்குநர்), N. நிர்மல் (தயாரிப்பு நிர்வாகி), மற்றும் JB விக்ரம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.