வீராயி மக்கள் விமர்சனம்

ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ் நந்தா தயாரிப்பில், கருப்பையா இயக்கத்தில், வேல ராமமூர்த்தி, மறைந்த மாரிமுத்து , தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தில் குமாரி, ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம்
வீராயி மக்கள்.

அறந்தாங்கியில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருக்கும் வீராயிக்கு மூத்த மகன் வேலராமமூர்த்தி, இளைய மகன் மாரிமுத்து, இவர்களின் தங்கையாக தீபா சங்கர், கணவனும் நான்காவது மகனும் இழந்து பிறகு சுமந்து பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்கிறார் வீராயி.

அண்ணன் வேல ராமமூர்த்தியும், தம்பி மாரிமுத்துவும், ஒரே தெருவில் வசித்து வந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், பகைமையும் வளர்த்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் மட்டும் பகையாக இல்லாமல் இவர்களது பிள்ளைகளையும் பகை உணர்வோடையே வளர்க்கிறார்கள்.

ஆனால் வேலராமமூர்த்தி இளைய மகனான நாயகன் சுரேஷ் நந்தா மட்டும் பகை உணர்வு இல்லாமல் இடம் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறார் அதற்காக பல வழிகளையும் மேற்கொள்கிறார் சுரேஷ் நந்தாவின் முயற்சியால் பகைவனோடு இருக்கும் உறவுகள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா அவர்கள் பிரிந்ததற்கான காரணம் என்ன என்பதை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கும் படம் தான் வீராயி மக்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசையமைப்பாளர் : தீபன் சக்ரவர்த்தி எடிட்டர் : முகன் வேல்
ஒளிப்பதிவாளர் : எம்.சீனிவாசன் பாடலாசிரியர் : நாகராஜ் கருப்பையா மற்றும் கேஜிஎஃப் மதுரகவி
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)