கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் புற்றுக்கோவிலில் உள்ள காளியம்மன் – கருப்பசாமி திருக்கோவில் ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக பால்குட ஊர்வலம் மற்றும் 51 தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது. தெப்பக்குளம் விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கிய பால்குட ஊர்வலம் மற்றும் 51 தீ சட்டிஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை வந்தடைந்து. இதனை தொடர்ந்து அம்மனுக்கு பாலபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.