சொத்து குவிப்பு வழக்கில், ஹிமாச்சல் பிரதேச காங்கிரஸ் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ, முதலமைச்சர் வீரபத்ர சிங், அவரது மனைவி, மகன் உட்பட 9 பேர் மீது வழக்குபதிவு செய்தது. இதன் அடிப்படையில் வீரபத்ரசிங் உள்ளிட்டோர் மீது அமலாக்க துறையும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து உள்ளது.
இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கில் வீரபத்ர சிங்கின் 5 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதுவரை சந்தை மதிப்பில் 40 கோடி ரூபாய் மதிப்புடைய வீரபத்ர சிங்கின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது