காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படம் ‘வீரப்பனின் கஜானா’
மேலும், தமிழ்நாட்டில் காடு என்றால் ஞாபகம் வருவது சத்தியமங்கலமும், வீரப்பனும் தான். ஆகையால், அதை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாகி வருகிறது. காட்டின் காவலனான வீரப்பன் சம்மந்தமானக் காட்சிகள் படத்தில் முக்கியமானதாக இருக்கும். குரங்கு, புலி, யானை என படம் முழுவதும் சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கிறது. ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் பிரபாதீஸ் ஷாம்ஸ் தயாரிக்க, ராட்சசி இயக்குனர் சை.கௌதம்ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் சேர்ந்து எழுதிய கதையை புதுமுக இயக்குநர் யாசின் இயக்குறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா என யூத் காம்போவுடன் உருவாவதால் இப்படம் குழந்தைகள் முதல் அனைவரும் குதூகளித்து பார்க்கக் கூடிய படமாக இருக்கும். தென்காசி, குற்றாலம், நாகர்கோவில் காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவிருக்கிறது.