வேடுவன் இணைய தொடர் விமர்சனம்

பவண் இயக்கத்தில், சஞ்சீவ் வெங்கட்,  கண்ணா ரவி, ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ஐஸ்வர்யா ரகுபதி, வினுஷா தேவி, லாவண்யா, ரேகா நாயர், பார்வதி, ஜீவா ரவி மற்றும் பலர் நடிப்பில் ஜீ5 தளத்தில் வெளிவந்துள்ள வெப் சீரிஸ் வேடுவன்.

தொடரிலும் பிரபல நடிகராக வருகிறார் கண்ணா ரவி, இவர் நடிப்பில் வெளிவந்த படம் தோல்வியடைகிறது அந்த தோல்விக்கு காரணம் கண்ணா ரவி அந்த கதையில் தலையிடுவது தான் என்று பலரும் கூறுகிறார்கள். 

இப்படி இருக்கும் சூழ்நிலையில், ஒரு புதிய படத்திற்காக கண்ணா ரவியிடம் கதை சொல்ல வருகிறார் இயக்குனர் ஒருவர். 

அந்த கதையில் நீங்கள் ஒரு அண்டர்கவர் போலீஸ் ஆபீஸர் என்று கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் அந்த கதை ஒரு உண்மை கதை என்றும் கூறுகிறார். கண்ணா ரவிக்கு கதை பிடித்து போவதால் அதில் நடிக்க ஒப்பந்தம் ஆகிறார்.

படப்பிடிப்பு ஆரம்பமாகிறது கண்ணா ரவி அந்த படத்தில் அருண்மொழிவர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு மனைவியாக லாவண்யாவும் 5 வயது மதிக்கத்தக்க ஒரு மகனும் இருக்கிறார். 

பிரபல ரவுடி ஒருவரை கண்ணா ரவி பிச்சைக்காரர் வேடம் அணிந்து, கண்காணித்து தக்க சமயத்தில் அவரை என்கவுண்டர் செய்து விடுகிறார். 

கதையில் இவர் போலீசாக இருப்பது இவருடைய மனைவிக்கும் காவல்துறை  உயர் அதிகாரி ஒருவருக்கு மட்டுமே தெரியும்.

இந்த வேலை சக்சஸ் ஆக முடிந்து விட்டதால், உயர் அதிகாரி கண்ணாரவியிடம் இன்னொரு என்கவுண்டர் கான பணியை ஒப்படைக்கிறார். 

சிறிய வயதில் இருந்து பல கொலைகள் செய்து பெரிய ரவுடியான பிறகு, ஊரிலுள்ள மக்கள் அனைவரும் போற்றக்கூடியவராகவும், மக்கள் மனதில் மதிப்பு மிக்கவராகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் சஞ்சீவை என்கவுண்டர் செய்வது தான் கண்ணார‌ ரவியின் அடுத்த அசைன்மென்ட்.

அதற்காக கண்ணா ரவி சஞ்சீவி இருக்கும் கிராமத்திற்கு சென்று அங்கிருக்கும் ஒரு ஹோட்டலில் வேலை செய்து சஞ்சீவி கண்காணிக்கிறார். அப்படி இருக்கும் சமயத்தில் தன்னுடைய முன்னாள் காதலி வினுஷா தான் சஞ்சீவின் மனைவி என்று தெரிய வருகிறது. 

அதனால் அதிர்ச்சி அடைகிறார் கண்ணா ரவி. அதன் பிறகு நடந்தது என்ன? கண்ணா ரவி சஞ்சீவை என்கவுண்டர் செய்தாரா? இல்லையா? என்பதே வேடுவன் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பாளர் பெயர் : சாகர் பெண்டேலா 

புரொடக்ஷன் ஹவுஸ் : ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் 

இயக்குனர் : பவன் குமார் 

திரைக்கதை : பவன் குமார் 

எழுத்தாளர் : பவன் குமார் 

பின்னணி இசை : விபின் பாஸ்கர்

எடிட்டர் : சுராஜ் கவி

ஒளிப்பதிவு : சீனிவாசன் தேவராஜ்

மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏய்ம்)