வட்டக்கானல் விமர்சனம்

பித்தாக் புகழேந்தி இயக்கத்தில், துருவன் மனோ, மீனாட்சி கோவிந்தராஜ், ஆர்கே சுரேஷ், ஆடுகளம் நரேன், பாடகர் மனோ, பாத்திமா பாபு, வித்யா பிரதீப், ஆர் கே வரதராஜ், வண்ண வண்ண பூக்கள் வினோதினி, விஜய் டிவி சரத், ஜார்ஜ் விஜய், முருகானந்தம், கபாலி விஸ்வந்த் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வட்டக்கானல்.

கொடைக்கானலில் இருக்கும் ஒரு வனப்பகுதி தான் வட்டக்காணல், அந்தப் பகுதியில் விளையும் போதை காளான் (மேஜிக் மஸ்ரூம்) மிகப் பிரபலமானது அதனை எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் பலர். 

அப்படிப்பட்ட போதை காளானை வைத்து பல கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அந்த இடத்தை தன்னுடைய கண்ட்ரோலில் வைத்திருக்கிறார் வில்லனான ஆர்.கே சுரேஷ்.

இவர் மூன்று சிறுவர்களை தன்னுடைய அடியாள் வேலைகளை செய்வதற்காக தன்னுடைய மகன்களாக வளர்த்து வருகிறார். அவர்கள் தான் துருவன் மனோ, கபாலி விஸ்வந்த், விஜய் டிவி சரத் இவர்கள் 3 பேரும் ஆர் கே சுரேஷ் என்ன சொன்னாலும் அதனை தவறாமல் செய்து வருவார்கள்.

நாயகி மீனாட்சி கோவிந்தராஜ் தன்னுடைய பரம்பரை சொத்தான எஸ்டேட்டை அங்கு வேலை பார்த்து வரும் ஏழை மக்களுக்கு கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு வருகிறார். 

மீனாட்சி கோவிந்தராஜுக்கும் துருவன் மனோவுக்கும் இடையே ஒரு கட்டத்தில் காதல் ஏற்படுகிறது.

இதற்கிடையே வித்யா பிரதிப் ஆர்கே சுரேஷை கொலை செய்ய ஆட்களை அனுப்புகிறார்.

மீனாட்சி கோவிந்தராஜ் ஏழை மக்களுக்கு கொடுக்க நினைக்கும் அந்த இடத்தை கொடுக்க விடாமல் தடுக்கும் வேலை செய்கிறார் ஆர் கே சுரேஷ். 

மீனாட்சி கோவிந்தராஜ் நினைத்தபடி சொத்தை பிரித்துக் கொடுக்க முடிந்ததா? இல்லையா? துருவன் மனோ அப்பா ஆர் கே சுரேஷின் பக்கம் இருந்தாரா? இல்லை  காதலியான மீனாட்சி கோவிந்தராஜன் பக்கம் நின்றாரா? வித்யா பிரதீப் ஆர் கே சுரேஷை கொலை செய்ய நினைப்பதற்கு காரணம் என்ன? என்பதே வட்டக்கானல் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : பித்தாப் புகழேந்தி

ஒளிப்பதிவு : எம் ஏ ஆனந்த் 

இசை : மாரிஸ் விஜய் 

தயாரிப்பு : MPR FILMS A மதியழகன், வீரம்மாள் & SKYLINE CINEMAS R.M. ராஜேஷ் 

பட தொகுப்பு : சாபூ ஜோசப்

கலை : DON பாலா

ஸ்டன்ட் இயக்கம் : DON அசோக்

நடனம் : ஷெரிப்

மக்கள் தொடர்பு : சாவித்திரி