வஞ்சகர் உலகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் அனிஷா அம்ப்ரோஸ்

பிராந்திய மொழி சினிமா துறைகளில் இருக்கும் ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் கோலிவுட்டின் மீது ஒரு பெரிய ஆசை உள்ளது. காரணம் இங்கு தான் மொழி, இன பாகுபாடு இல்லாமல் நல்ல, திறமையான ஆட்களை வரவேற்கிறார்கள். உண்மையில், பல நடிகைகள் அத்தகைய வெற்றியை பெற்றிருக்கிறார்கள். கன்னட திரைப்படம் ‘கர்வ்வா’ மற்றும் பன்மொழி திரைப்படமான ‘மனமந்தா’ (மோகன்லால் மற்றும் கௌதமி நடித்தது) போன்ற திரைப்படங்களில், திறமையான நடிப்பால் மிகவும் பாராட்டப்பட்ட  அனிஷா அம்ப்ரோஸ், தமிழ் சினிமாவில் வஞ்சகர் உலகம் படத்தின் மூலம் காலடி எடுத்து வைக்கிறார். 
ஒட்டுமொத்த படக் குழுவுக்கும் படம் சிறப்பாக வந்திருப்பதில் முழு திருப்தி, அனீஷா மட்டும் விதிவிலக்கல்ல. அவர் இந்த படத்தில் ஒரு பாகமாக இருப்பதற்காக அவர் மகிழ்ச்சியடைகிறார். “செய்தி சேகரிக்கும் போது ஒரு கொடூரமான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் சம்யுக்தா என்ற பத்திரிகையாளரின் பாத்திரத்தில்  நடிக்கிறேன். அதிலிருந்து அவள் மீண்டு வந்தாளா என்பது? என்பது தான் என் கதாபாத்திரம் என சொல்லும் அனிஷா, வஞ்சகர் உலகம் திரைக்கதை ஹைப்பர்லிங்க் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரே நேரத்தில் நடக்கும் பல்வேறு கதைகள், அதன் கதாபாத்திரங்களை கொண்ட படமாக உருவாகியிருக்கிறது.
இந்திய பார்வையாளர்களுக்கு ‘கேங்க்ஸ்டர்’ கதைகளும் சலித்து போயிருக்கின்றனவா? என்று கேட்டதற்கு “வஞ்சகர் உலகம் ஒரு வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை என நான் உறுதியளிக்கிறேன். பல காதல் கதைகள் ஒவ்வொன்றும் அதன் முன்னுரை மற்றும் அணுகுமுறையில் வேறுபடுவது போலவே இதுவும் ஒன்று”.
இயக்குனர் மனோஜ் பீதா, அனிஷாவை அணுகியதை முதல்முறையாக நினைவு கூர்கிறார் அனிஷா. ஸ்கைப் மூலம் எனக்கு ஸ்கிரிப்டை விளக்கினார் மனோஜ். கதை மிகவும் சிறப்பாக இருந்தது. தவிர, என் முந்தைய படங்களை அவர் பார்த்திருப்பாரா? என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர், நான் அந்த பாத்திரத்திற்காக பரிசீலிக்க பட்டேன்.நாங்கள் படப்பிடிப்பை ஆரம்பித்தபோது, எல்லாம் ​​சரியான அமைந்தது. படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் படம் சிறப்பாக வந்து கொண்டிருந்தது மகிழ்ச்சி அளித்தது.
அனிஷா அம்ப்ரோஸ், சிபி புவன சந்திரன், ஹரேஷ் பெரடி, குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் ஆகியோர் வஞ்சகர் உலகம் படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
சிறப்பான பின்னணி இசையை அமைப்பதில் வல்லவரான சாம் சிஎஸ் இசையமைக்கிறார். ரோட்ரிகோ டெல் ரியோ, ஹெர்ரெரா மற்றும் சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். அவரது நேர்த்தியான கட்ஸ், இந்த ஹைப்பர்லிங்க் கதைக்கு மிக முக்கியமான சிறப்பாக அமைந்துள்ளது. லாபிரிந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரிக்கிறார்.