வி.ஆர் மணிகண்ட ராமன் & வி காயத்ரி தயாரிப்பில், வி எஸ் மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர் சி, தன்யா ஹோப், ஹேபா படேல், கமல் காமராஜு, அபிராமி வெங்கடாசலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், ஜெயகுமார், டி எஸ் கே
ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வல்லான்.
காவல்துறையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் சுந்தர் சி அவர் யாரையோ மிகுந்த கோபத்துடன் தேடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் மிகப்பெரும் பணக்காரரும் தொழிலதிபருமான ஜெயக்குமாரின் மருமகன் கமல் காமராஜ் மர்மமான முறையில் அவர்களுடைய பங்களாவில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.
இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஆனால் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் காவல் துறை மேல் அதிகாரி அதனை சஸ்பெண்ட் செய்யப்பட்ட சுந்தர் சி இடம் விசாரித்து தரும்படி கேட்கிறார். இதில் சுந்தர் சிக்கும் தேவையான விஷயம் இருப்பதால் அந்த வழக்கை விசாரிக்க ஒத்துக் கொண்டு விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதனை பற்றி விரிவாக செய்தி சொல்லும் youtube பெண் ஒருவரும் கொல்லப்படுகிறார்.
இப்படி ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டு அதன் விசாரணை தீவிரமாக போய்க் கொண்டிருக்கும் போது
அடர்ந்த காட்டிற்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடைக்கிறது. அந்த சடலம் அருகே வேறு ஒரு பெண்ணின் சடலமும் இருப்பதாக சுந்தர் சிக்கு தகவல் வர அங்கு வருகிறார், அந்த சடலத்தை பார்த்ததும் சுந்தர் சி கதறி அழுகிறார்.
சுந்தர் சி அந்த சடலத்தை பார்த்து கதறி அழ காரணம் என்ன? தொடர் கொலைகளை செய்த கொலையாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே வல்லான் படத்தோட மீதிகதை.
சாதாரணமாக குடும்ப entertainer களில் நடித்து வந்த சுந்தர் சி, இப்படத்தில் தனது புதிய நடிப்பை கொடுத்துள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் சூப்பர்.
சந்தோஷ் தயாநிதியின் இசை படம் முழுக்க சஸ்பென்ஸ் தெரியப்படுத்தும் வகையில் உள்ளது.
மணி பெருமாள் ஒளிப்பதிவில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தின் அழகையும், கதையின் இருண்ட தருணங்களை மிகச் சிறப்பாகக் காட்டியுள்ளார்.
வல்லான் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த மர்மம்.
ரேட்டிங் 3/5