அரசியல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலட்சுமி

சத்யா படத்தின் சக்சஸ்மீட்டில் பேசிய நடிகை வரலக்ஷ்மி  அரசியலில் குதிக்கவுள்ளதாக வரும் செய்திகள் பற்றி விளக்கமளித்தார். சமீபத்தில் சில அரசியல் தலைவர்களை அவர் சந்தித்ததால் இப்படி செய்திகள் பரவியது. “சேவ் சக்தி அமைப்பு விஷயமாகதான் நான் முதல்வரை சந்தித்தேன். நான் அரசியலில் இணைய போகிறேனா என்று அனைவரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக இப்போது நான் அரசியலில் சேரவில்லை. அப்படி நான் அரசியலுக்கு வரும் போது அதை பற்றி உங்களிடம் தனியாக பிரஸ் மீட் வைத்து தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

“என்னுடைய தந்தையின் பார்டியில் கூட நான் இணையவில்லை. நான் இப்போதைக்கு சத்யா சக்சஸ் பார்டியில் தான் உள்ளேன். இந்த வருடத்தில் விக்ரம் வேதா , சத்யா என எனக்கு இரண்டு வெற்றி படங்கள் உள்ளது மகிழ்ச்சி” என்றார் வரலட்சுமி சரத்குமார்.