வல்லதேசம் திரைவிமர்சனம்

ராணுவ அதிகாரியாக இருக்கும் நாசரிடம் ஒரு கமாண்டோ படை இருக்கிறது. அது அனுஹாசன் தலைமையில் இயங்கி வருகிறது. அனு ஹாசன் ஒரு ஆணுக்கு நிகராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், 16 தீவிரவாதிகள் அதிநவீன துப்பாக்கியுடன் இருப்பதாக போலீசுக்கு தகவல் வருகிறது. போலீஸ் சமாளிக்க முடியாததால், அனுஹாசன் தலைமையிலான கமாண்டோ படை அவர்களை தாக்கி வெற்றி பெறுகிறார்கள்.

இந்த தீவிரவாதிகள் மூலம், இந்தியாவின் முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கிறது. இது லண்டனில் இருக்கும் டேவிட் தலைமையில் இயங்குவதும் தெரியவருகிறது. இதை ரகசியமாக விசாரிக்க முடிவு செய்கிறார்கள். அதன்படி அனுஹாசனை சஸ்பெண்ட் செய்வதுபோல் நாடகமாடி, குடும்பத்துடன் லண்டனில் குடியேறுகிறார் அனுஹாசன். 

தீவிரவாதிகள் அனுஹாசனின் கணவர்தான் ரகசிய உளவாளி என்று கருதி அவரை கொலை செய்து விடுகிறார்கள், மகளை கடத்திவிடுகிறாகள். இந்த தாக்குதலில் தப்பிக்கும் அனுஹாசன் இறுதியில், தனி நபராக இருந்து, இந்தியாவை அழிக்க இருக்கும் டேவிட்டின் திட்டத்தை முறியடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்