வடம் விமர்சனம்

கேந்திரன் இயக்கத்தில், விமல், நட்ராஜ், அனுஷ்காந்த், சனுஷ்கா ஸ்ரீ, ஆடுகளம் நரேன், இந்துமதி, பாலசரவணன், குட்டிப்புலி சரவணன், மதுசூதனன், தீபா சங்கர் மற்றும் பல நடிப்பில் வெளிவந்துள்ள படம் வடம்.

ஆடுகளம் நரேன் மகனாக இருக்கிறார் விமல். மஞ்சுவிரட்டு போட்டியில் பல காலமாக விமலின் குடும்பமே வெற்றி பெற்று வருகிறது. அவர்கள் பல காளைகளையும் வளர்த்து வருகிறார்கள்.

அவர்கள் வளர்த்து வரும் காலையில் பாண்டி முனி என்ற ஒரு காளையை மிக பாசத்துடனும் பிரியத்துடன் வளர்த்து வருகின்றனர். அந்த பாண்டி முனி என்ற காலை பார்வை இழந்து இருக்கிறது. 

லோக்கல் ரவுடியாக இருக்கும் மது மதுசூதனன்  ஆடுகளம் நரேனையும் விமலையும் கொள்ள நினைக்கிறார்.

நடிகை சனுஷ்கா ஸ்ரீயுடன் விமலுக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. இந்த நிலையில் நாயகி சனுஷ்கா ஸ்ரீ அதனால் இரவு விமலிடம் தனிமையாக பேச வேண்டும் என்று அவரை அழைக்கிறார்.

அந்த சமயத்தில் விமலை கொலை செய்ய வேண்டும் என்று மறுசுதனின் தம்பி அங்கு அடியாட்களோடு வருகிறார். ஆனால் விமலோ அவர்களை அடித்து துவம்சம் செய்து விடுகிறார். 

ஆனால் அனுஷ்கா ஸ்ரீ வளர்க்கும் மாட்டின் மூலம் கொலை செய்ய முயற்சி செய்கிறார். இதனைக் கண்டு விமல் அதிர்ச்சியடைகிறார். சனுஷ்கா ஸ்ரீ விமிலை கொல்ல நினைக்க காரணம் என்ன? அதன் பிறகு விமலின் நிலை என்னவானது? என்பதே வடம் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : கேந்திரன் 

தயாரிப்பு : ராஜசேகர் 

ஒளிப்பதிவு : பிரசன்னா எஸ் குமார் 

இசை : டி இமான் 

மக்கள் தொடர்பு : சதீஷ் எஸ் டு மீடியா