வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில், டி.ஜி.விஷ்வா பிரசாத் தயாரிப்பில், கார்த்திக் யோகி இயக்கத்தில்,  சந்தானம், மேகா ஆகாஷ், மாறன், சேசு , தமிழ் , எம்.எஸ். பாஸ்கர் , ஜான் விஜய் , ரவி மரியா,  இட் ஈஸ் பிரசாந்த்,  ஜாக்லீன் , கூல் சுரேஷ் , நிழல்கள் ரவி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி.

வடக்குப்பட்டி என்ற கிராமத்தில் 1960 ஆம் ஆண்டில் கதை ஆரம்பமாகிறது. இந்த ஊரில் பல வருடங்களுக்கு முன் பெரும் வெள்ளம் ஏற்பட்டு குலதெய்வமான கண்ணாத்தா கோயில் அடித்து செல்லப்பட்டு அருகில் இருக்கும் மலை மேல் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

கோயில் இல்லாததால், இரவில் பொருட்கள் காணாமல் போவதும், மக்கள் இறப்பதற்கும் இரவில் நடமாடும் காட்டியறியும் பேயும் தான் காரணம் என்று நினைத்து மக்கள் இரவில் வெளியே வர பயப்படுகின்றனர். தந்தை இல்லாமல் சிறு வயதில் தன் தாயுடன் இருந்து பானைகள் செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் சந்தானம். 

அதற்கேற்ற சரியான வருமானம் இல்லாமலும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாலும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வருகிறார் சந்தானம்.

இப்படி இருக்கும் சமயத்தில் ஒரு நாள் இரவில் திருடன் ஒருவன் நகைகளை திருடி, பானையையும் திருடி கொண்டு ஓடுவதை பார்க்கும் சந்தானம் அவனை துரத்தி செல்லும்போது திருடன் நகையை ஒரு இடத்தில் புதைத்து விட்டு ஓடுகிறான் அப்போது எதிரே வரும் காட்டேரி பாய் பார்த்து பயந்து தீயில் கருகி விடுகிறான்.

புதைத்து வைத்திருக்கும் பானை திடீர்னு எதிர்பாராத விதமாக உடைந்து விட பானைக்குள் இருக்கும் நகையை பார்த்து கண்ணாத்தா கடவுள் தான் காட்டேரியை அழித்து நகையை காப்பாற்றியதாக ஊர்மக்கள் நம்புகின்றனர் நகையும் தங்களின் காப்பாற்ற நினைக்கின்றனர்.

மக்களின் இந்த நம்பிக்கையை பணம் ஆக்க நினைக்கும் சந்தானம் தன்னுடைய நிலத்திலேயே பானையை அம்மனாக வடித்து கோயில் கட்டி நண்பர்களான இயேசு மாறன் ஆகியோரின் கூட்டு சேர்ந்து பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்

 அந்த கிராமத்தில் இரு துருவங்களாக இருக்கும் செல்வாக்கு மிகுந்த ஜான் விஜய் ரவிமரியா இரண்டு பேரும் எதிரிகளாக இருக்கின்றனர்.

சந்தானம் கோயிலை வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டு ஜாலியாக இருக்கும் சமயத்தில், இதனை கேள்விப்படும் தாசில்தார் தமிழ் சந்தானத்துடன் கான்டிரக்ட் போட்டு பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார். ஆனால் இதற்கு சந்தானம் சம்மதிக்கவில்லை.

அதனால் தமிழ் ஜான் விஜயையும் ராமசாமியை வைத்து பிரச்சனையை ஏற்படுத்தி கோயிலை மூடி சீல் வைக்கும் அளவுக்கு போய்விடுகிறார்.

அதன் பிறகு சந்தானம் கோயிலை திறக்க என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டார்? தமிழ் அதனை தடுக்க என்னவெல்லாம் செய்தார்? கோவில் திறக்கப்பட்டதா? இல்லையா? என்பதை காமெடியாகவும் ஜாலியாகவும் சொல்லி இருக்கும் படமே வடக்குப்பட்டி ராமசாமி.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இணை தயாரிப்பாளர் : விவேக் குச்சிபோட்லா

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : வி.ஸ்ரீநட்ராஜ்

இணை தயாரிப்பாளர்கள் : சுனில் ஷா, ராஜா சுப்ரமணியன்

எடிட்டர் : சுனில் ஷா, ராஜா சுப்ரமணியன், எக்சிகியூட்டிவ் 

தயாரிப்பாளர் : விஜயா ராஜேஷ் 

இசை : ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு : தீபக்

எடிட்டிங் : டி.சிவானந்தீஸ்வரன் 

கலை இயக்குனர் : ஏ. ராஜேஷ், 

ஸ்டண்ட் : மகேஷ் மேத்யூ

நடன இயக்குனர் : எம். ஷெரிப், 

பாடல்கள் : அறிவு, பாக்கியம் சங்கர், கவிஞர் சாரதி

கூடுதல் திரைக்கதை : விக்னேஷ் பாபு, விக்னேஷ் வேணுகோபால், 

தயாரிப்பு நிர்வாகி : டி. முருகேசன் 

தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் : மகேஷ் ஷங்கர் அல்பின் கிளேமண்ட் 

காஸ்ட்யூமர் : எம். சீனா சுவாமி

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா & நாசர்