ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கட்டாயமாக நிரப்பப்படும்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியர்களுக்கு பேட்டியளிக்கையில், பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “அட்டவணைப்படி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும். மேலும், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கட்டாயமாக கூடிய விரைவில் நிரப்பப்படும்” என்றார்.

மேலும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பிளஸ்1 பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட மாதிரி வினாத்தாள் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும்.

பொதுத்தேர்வு பற்றி மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. அதற்கான பயிற்சியை ஆசிரியர்கள் வழங்குவார்கள். அதே போல் பிளஸ்2 பொதுத்தேர்வும் 200 மதிப்பெண்ணிலிருந்து 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தேர்வை எளிதாக உணர்வர். இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு நடத்துவதற்கான பணிகளை அரசு செய்து வருகிறது” என்றார்.