வா வாத்தியார் விமர்சனம்

கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, ராஜ்கிரண், சத்யராஜ், கிரித்தி ஷெட்டி, ஆனந்த்ராஜ், ஜி.எம். சுந்தர், கருணாகரன், ஷில்பா மஞ்சுநாத், ரமேஷ் திலக், நிழல்கள் ரவி, யார் கண்ணன், நிவாஸ் ஆதித்தன், பி எல் தேனப்பன், வித்யா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வா வாத்தியார்.

ராஜ்கிரண் ஒரு தீவிர எம்ஜிஆர் ரசிகராக இருக்கிறார். எம்ஜிஆர் இறந்த தினத்தில் அவருடைய சாயலில் பிறக்கும் தன்னுடைய பேரன் கார்த்தியை எம்ஜிஆரை போலவே வளர்க்க நினைத்து வளர்க்கிறார். 

ஆனால் கார்த்தியோ உடலால் எம்ஜிஆர் ஆக இருந்தாலும் செய்கின்ற செயல் அனைத்தும் நம்பியார் போல் நடந்து கொள்கிறார். 

காவல்துறை அதிகாரியாக இருக்கும் கார்த்திக் கார்ப்பரேட் மற்றும் அரசியலில் இடைத்தரகராக இருக்கும் சத்யராஜுடன் சேர்த்து மக்களுக்காக போராடுபவர்களை எல்லாம் அழிக்கும் செயலில் ஈடுபடுகிறார். 

எம்ஜிஆர் போல் நடக்க வேண்டி கார்த்திய அவருடைய வழியில் இல்லாமல் மாறாக இருப்பது ராஜ்கிரனுக்கு தெரிந்ததும் மன வருத்தத்தால் இறந்து போய்விடுகிறார். 

தாத்தா ராஜ்கிரன் இறப்பால் மனமுடையும் கார்த்தியின் உடலில் திடீரென ஒருவித மாற்றம் ஏற்படுகிறது. அந்த மாற்றம் என்ன? அதன் பிறகு நடந்தது என்ன? என்பதே வா வாத்தியார் படத்தோட மீதிக்கதை. 

 

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : கே.இ ஞானவேல் ராஜா 

இயக்கம் : நலன் குமாரசாமி 

ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி வில்லியம்ஸ் 

இசை : சந்தோஷ் நாராயணன் 

படத்தொகுப்பு : வெற்றி கிருஷ்ணன் 

மக்கள் தொடர்பு : யுவராஜ்