வா வரலாம் வா விமர்சனம்

எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில், எஸ்.பி.ஆர் தயாரிப்பில், எஸ் பி ஆர் மற்றும் எல் ஜி ரவிச்சந்திரன் இயக்கத்தில், பாலாஜி முருகதாஸ், மஹானா சஞ்சீவி, காயத்ரி ரேமா, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம்.புலி, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, தீபா, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டாமணி, மீசை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வா வரலாம் வா.

சிறு வயதிலேயே அனாதைகளாக இருக்கும் பாலாஜி முருகதாஸ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி பசிக்காக கொலை செய்துவிட்டு சிறை சென்று பல வருடங்கள் கழித்து வெளியே வருகின்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த அவர்கள் இருவரும் வேலை தேடுகிறார்கள்.

அவர்களுக்கு யாரும் வேலை கொடுக்காததால் மறுபடியும், திருட்டு வேலைகளில் ஈடுபட முடிவு செய்யும் இவர்கள் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட மைம் கோபியிடம் வேலைக்கு சேருகிறார்கள். வால்வோ பஸ்ஸை திருட சொல்லி அதை விற்று பணம் சம்பாதிக்கலாம் என்று மைம்கோபி பாலாஜியையும், ரெடின் கிங்ஸ்லியையும் அனுப்புகிறார்.

இருவரும் ஒரு வாழ்வோ பஸ்ஸை கடத்துகின்றனர். அந்த பஸ்ஸில் 40 குழந்தைகள், மஹானா, காயத்ரி, சிங்கம் புலி, தீபா என அனைவரையும் சேர்த்து கடத்தி தனியாக பணம் கேட்க திட்டம் போடுகின்றனர். அவர்கள் கடத்திய குழந்தைகள் அனாதை குழந்தைகள் என்பதால், அவர்களுடைய திட்டம் தோல்வியடைகிறது. இந்த சமயத்தில் மஹானா மற்றும் காயத்ரி இருவரையும் காதலிக்க தொடங்குகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், பாலாஜி மற்றும் ரெடின் கிங்ஸ்லி கடத்திய பஸ்ஸில் இருக்கும் பெண்கள் மலேசியா நாட்டைச் சேர்ந்த பணக்கார வீட்டு பெண்கள் என்பதால், அவர்களை கடத்தி பணம் பறிக்க திட்டம் போடுகிறார் மைம் கோபி.

மயில் கோபியின் படத்தில் திட்டம் வெற்றி பெற்றதா? பாலாஜி ரெடின் கிங்ஸ்லி காதல் வெற்றி பெற்றதா? என்பதே வா வரலாம் படத்தோட மீதி கதை

தொழில் நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : எல்ஜி ரவிச்சந்தர் எஸ் பி ஆர்
இசை : தேவா
ஒளிப்பதிவு : கார்த்திக் ராஜா
மக்கள் தொடர்பு : வெங்கட்