மூன் பிக்சர்ஸ் சார்பில், ஆதம்பாவா தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், அமீர், சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் உயிர் தமிழுக்கு.
கேபிள் டிவி ஆபரேட்டராக பாண்டி என்ற பெயரில் ஊர் மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார் அமீர். மக்களுக்கு உதவிகள் செய்வதால் எம்ஜிஆர் பாண்டி என்ற பெயர் அவருக்கு வருகிறது.
இந்த சமயத்தில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் நண்பர் இமான் அண்ணாச்சியுடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக செல்லும் அமீர் எதிர்க்கட்சி அமைச்சர் ஆனந்தராஜின் மகள் சாந்தினி ஸ்ரீதரனை பார்த்தவுடன் காதல் வசப்படுகிறார்.
அதனால் இமான் அண்ணாச்சிக்கு பதிலாக மக்கள் முன்னணி கட்சி சார்பாக அமீர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் சாந்தினி ஸ்ரீதரனை சந்தித்து பேசி காதல் வளர்க்க பார்க்கிறார். கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்று, சாந்தினி ஸ்ரீதரனை காதலித்தாலும், ஆனந்தராஜ் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த சமயத்தில் மர்ம நபர்களால் ஆனந்தராஜ் கொல்லப்பட, அதற்கு காரணம் அமீர் தான் என்று போலீஸும், சாந்தினி ஸ்ரீதரனும் நம்பி அமீரை வெறுக்கிறார்.
பிறகு என்ன நடந்தது? அமீர் தான் கொலை செய்யவில்லை என்று நிரூபித்தாரா? இல்லையா? சாந்தினி ஸ்ரீதரன் அமீரின் காதலை ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதே உயிர் தமிழுக்கு படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இசை : வித்யாசாகர்
பாடல்கள் : பா.விஜய்
வசனம் : பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா
ஒளிப்பதிவு : தேவராஜ்
எடிட்டர் : அசோக்
வெளியீடு : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
மக்கள் தொடர்பு : A ஜான்