நவீன் டி கோபால் இயக்கத்தில் டீஜய் அருணாசலம், ஜனனி, மந்த்ரா, ஆதித்யா கதிர், தங்கதுரை, கிரேன் மனோகர், செந்தில்குமாரி, பாவல் நவநீதன், மெல்வின் ஜெயப்பிரகாஷ், ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் உசுரே.
நாயகன் டீஜய் அப்பா அம்மாவிற்கு ஒரே மகனாக இருக்கிறார். தன்னுடைய மகன் மீது அம்மா அப்பா இருவரும் மிகுந்த பாசமும் வைத்திருக்கிறார்கள்.
நண்பர்களோடு அரட்டை அடிப்பது, ஊர் சுற்றுவது, வேலைக்கு செல்வது என அந்த வயதில் இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கை போல் டீஜய் வாழ்க்கையும் போய்க் கொண்டிருக்கிறது.
டீஜய்யின் எதிர் வீட்டிற்கு குடி வருகிறார் நாயகி ஜனனி. ஜனனி அம்மாவாக மந்த்ரா இருக்கிறார். வேலைக்கு சென்று கொண்டிருக்கும் ஜனனியை யாராவது பார்த்தாலே அவர்கள் மீது கோபம் கொள்கிறார் மந்த்ரா.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் டீஜய் ஜனனியை காதலிக்க ஆரம்பிக்கிறார். முதலில் ஏற்க மறுக்கும் ஜனனி பிறகு அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார்.
இவர்களது காதல் மந்த்ராவிற்கு தெரிய வர அவர்களை பிரிக்க மந்திரா திட்டம் போடுகிறார்.
மந்த்ராவின் திட்டம் பழித்ததா? இல்லையா? டீஜேவும் ஜனனியும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்றும் பல எதிர்பாராத அதிர்ச்சியான சம்பவமே உசிரே படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து இயக்கம் : நவீன் டி கோபால்
ஒளிப்பதிவு : மார்க்கி சாய்
இசை : கிரண் ஜோஸ்
எடிட்டர் : மணி மாறன்
கலை : சவுந்தர் நல்லுசாமி
நடன இயக்குநர் : பாரதி
பாடல் வரிகள் : மோகன் லால்
ஒப்பனை : சசிகுமார்
ஸ்டில்ஸ் : மஞ்சு ஆதித்யா
விளம்பர வடிவமைப்பாளர் : shynu mash
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் : வெங்கடேஷ்
திட்ட மேலாளர் : ஜெயபிரகாஷ்
தயாரிப்பாளர் : ஸ்ரீ கிருஷ்ணா ப்ரொடக்ஷன்ஸ் மவுலி எம் ராதாகிருஷ்ணா
மக்கள் தொடர்பு : சாவித்திரி
உசுரே மற்றும் ஒரு காதல் கதை
ரேட்டிங் ⭐ ⭐ ⭐

