ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. காஷ்மீரைச் சேர்ந்த சலாவுதீன், காஷ்மீர் பிரச்னையில் அமைதியான தீர்வை எதிர்க்க உறுதி பூண்டிருப்பதாலும், மேலும் பல தற்கொலை படையினருக்கு பயிற்சியளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்ததாலும் இந்த முடிவை அமெரிக்க அரசு எடுத்துள்ளது. அமெரிக்காவின் அறிவிப்பை இந்தியா வரவேற்றுள்ளது.