இறுகப்பற்று திரைப்படத்தின் வித்தியாசமான டீஸர் ஒன்றை, தயாரிப்பு நிறுவனம் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது.
விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ மற்றும் சானியா உள்ளிட்ட நடிகர்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் இறுகப்பற்று. எலி, தெனாலிராமன் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
டாணாக்காரன், மான்ஸ்டர், மாநகரம் என விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றுள்ள படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம், இறுகப்பற்று படத்தைத் தயாரித்துள்ளது. படத்தின் வெளியீடு விரைவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, ரசிகர்களுக்குள் எதிர்பார்ப்பை உருவாக்கும் வண்ணம், ஒரு புதுமையான பாணியில் டீஸர் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக திரைப்பட டீஸர்களில், அந்தத் திரைப்படங்களின் காட்சிகளே இடம் பெறும். ஆனால் இறுகப்பற்று டீஸரில் உண்மையான திருமணமான ஜோடிகளின் வெளிப்படையான உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் அன்பு, அன்யோன்னியம், புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றில் இருக்கும் சிக்கல்கள் என்ன என்பது புலனாகி அது இறுகப்பற்று படத்தின் கருவைப் பிரதிபலிக்கும் வண்ணம் டீஸராகப் பயனபடுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக திருமணமான தம்பதிகளை வைத்து ஒரு நிகழ்ச்சியை படக்குழு நடத்தியது. இதில் பங்கேற்ற ஜோடிகள் தங்களின் துணை குறித்து சரியாக தெரிந்து கொள்ளும் வகையில், தங்கள் திருமண வாழ்க்கை குறித்து, புரிதல் குறித்து பேசி, கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தனர். இந்த நிகழ்வு (அனுமதியுடன்) படம் பிடிக்கப்பட்டே, டீஸராக வெளியாகியுள்ளது.
திருமண உறவில் இருப்பது தொடர்பான பொதுவான அனுபவங்களை எடுத்துரைப்பதன் மூலம் பார்வையாளர்களை ஆழமான மட்டத்தில் கவர்ந்திழுக்கும் நோக்கத்தோடு இந்த டீஸர் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையான தம்பதிகள் தங்கள் தனிப்பட்ட பயணங்கள், போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதைக் காண்பிப்பதன் மூலம் பல்வேறு பின்னணியில் இருந்து பார்வையாளர்களுடன் இணைவதை டீஸர் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிஜ தம்பதிகள், வெளிப்படையாக தங்களின் தனிப்பட்ட பயணங்கள், பிரச்சினைகள், சந்தோஷங்கள் குறித்துப் பேசுவது, அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், “திரைப்பட ரசிகர்களை ஈர்க்கும் புதுமையான யோசனைகளை நாங்கள் தொடர்ந்து திரைக்குக் கொண்டு வருகிறோம். தற்போது இறுகப்பற்று திரைப்படத்தின் உலகை, அந்த உணர்வை பார்வையாளர்களுக்குத் தருவதில் மகிழ்ச்சியடைகிறோம், இது பார்வையாளர்களை அவர்களின் சொந்த உணர்வுகளையும் அனுபவங்களையும் யோசித்து, உணர வேண்டும் என்ற எண்ணத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது”
TEASER LINK – https://youtu.be/FBdtwYDAjlw