தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
சத்யராஜ் மகள் திவ்யா தென் இந்தியாவில் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர், அவர் இப்பொழுது உலகப் புகழ் தொண்டு நிறுவனமான அக்சயா பாத்ராவின் தூதுவர். அக்சய பாத்ரா (Akshaya Patra) இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்தியாவில் 12 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது, 36 இடங்களில் சமையல் செய்து பல லட்சம் குழந்தைகளுக்கு இலவசமாக ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குகிறது.
திவ்யா சத்யராஜ் இன்று மத்திய கல்வி அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்களை சந்தித்து தமிழ் நாட்டின் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு வழங்க அரசாங்கம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இது குறித்து திவ்யா “ஆரோக்கியமான வாழ்வு வசதி உள்ளவர்களுக்கு மட்டும் தான் என்ற நிலை மாற வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக உள்ளது . குழந்தைகளுக்கு தேவை உணவு மட்டும் அல்ல, ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு. அக்ஷ்ய பாத்ராவின் ஆரோக்கியமான மதிய உணவு திட்டத்தால் தமிழ் நாட்டின் குழந்தைகளும் பயன் அடைய வேண்டும்…. இதட்கு அரசாங்கம் உதவ வேண்டும்.”என்று கூறினார்.