நல்ல கதையம்சம் உடைய மிகச்சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து, அதை மக்களிடம் சிறந்த முறையில் மிகுந்த கவனத்தோடு கொண்டு சேர்க்கும் முயற்சியை தொடர்ந்து செய்வது தான் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் அவர்களின் முக்கியமான நோக்கம். ஒரு தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக கடந்த பல ஆண்டுகளாக அதனை நிரூபித்தவர் ரவீந்திரன். அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியின் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் சீதக்காதி படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை கைப்பற்றியிருக்கிறார்.
மேலும், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருமே மேற்சொன்ன விஷயங்களில் ஒரே மாதிரியானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்த விக்ரம் வேதா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. பாலாஜி தரணிதரனின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் சென்று சேரும்.
‘நல்ல கதை எப்போதும் தன்னை நல்ல முறையில் கொண்டு சேர்க்கும் திறமையானவர்களை சென்று சேரும்’ என்ற நம்புகிறார்கள் பேஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளார்கள். பாலாஜி தரணிதரன் இந்த படத்தில் செய்திருக்கும் விஷயங்கள் நிச்சயமாக உலகளாவிய பார்வையாளர்களால் பாராட்டப்படும். இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயது மேடை நாடகக் கலைஞராக தோன்றுவதை கண்ட ஒட்டுமொத்த திரையுலகில் ஆச்சர்யத்தில் உறைந்து போயிருக்கிறது. மேலும், சீதக்காதியில் விஜய் சேதுபதியே தனது பரிசோதனை முயற்சியை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
டி.கே.சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்ய, ’96’ படப்புகழ் கோவிந்த் வசந்தா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியிருக்கிறது.