சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், ப்ரியாலயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவன்யா ஆகியோர் நடிப்பில் இன்றைய சமூக ஊடகங்களால் ஏற்படும் விபரீதங்களை சொல்லி இருக்கும் படமே ‘ட்ரெண்டிங்’
கலையரசனும் பிரியாலயாவும் இளம் தம்பதிகளாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்துகிறார்கள். அந்த youtube சேனலில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து பெரிய பங்களா வீடு, கார் என வசதியாக வாழ்கிறார்கள்.
ஒருநாள் திடீரென அவர்களது யூடியூப் சேனல் டெலிட் ஆகி விடுகிறது. அதனால் வருமானம் ஏதும் இல்லாமல் தவிக்கிறார்கள். வீட்டிற்கு வாங்கிய கடன் சுமை அதிகரிக்கிறது.
இந்த சமயத்தில் அவர்களுக்கு தொலைபேசியில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொள்கிறார். அதில் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தப் போவதாகவும் நீங்கள் இதில் பங்கேற்றால் கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.
அதே நேரத்தில் இந்த ரியாலிட்டி ஷோவை பற்றி யாரிடமும் எந்த தகவலையும் தெரிவிக்கக் கூடாது என்றும் மற்றும் பல விதிகளையும் சொல்கிறார்.
இவர்கள் இருவரும் அந்த போட்டியை அவர்களுடைய வீட்டிலேயே விளையாடலாம். ஏழு நாட்கள் விளையாட வேண்டும் என்றும் அவர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்களில் வெற்றி பெற்றால் அவர்களின் பணம் அவர்களின் அக்கவுண்டுக்கு வந்து சேரும் என்றும் சொல்கிறார்.
அதே சமயம் டாஸ்க் தோல்வியடைந்தால் வெற்றி பெற்ற பரிசு பணம் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.
தங்களுடைய கடன் பிரச்சனையை சரி செய்வதற்காக அந்த விளையாட்டு ஒப்புக்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் அதில் வரும் டாஸ்க்கள் எளிமையாக இருக்கும் பட்சத்தில் சில லட்சங்களை வெற்றி பெறுகிறார்கள்.
ஆனால் அடுத்தடுத்த டாஸ்க்களால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது.
அது என்ன மாதிரியான டாஸ்க்கள்? அந்த டாஸ்க்கால் வந்த பிரச்சனைகள் என்ன? அந்த டாஸ்கை கடைசிவரை விளையாண்டு பணத்தை வென்றார்களா? இல்லையா? என்பதே ‘ட்ரெண்டிங்’ படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுதி இயக்கியவர் : சிவராஜ்
தயாரிப்பு : ராம் ஃபிலிம் ஃபேக்டரி, ஆனந்த் ஜி பிரசண்ட்ஸ்
தயாரிப்பாளர் : மீனாட்சி ஆனந்த்
இசை : சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு இயக்குனர் : பிரவீன் பாலு
கலை இயக்குனர் : அருண்குமார்
தொகுப்பாளர் : நாகூரான் ராமச்சந்திரன்
இணை இயக்குனர்கள் : மதுரா, விஜயகுமார்
இணை இயக்குனர் : தினேஷ்ராஜன் முத்துக்குமரன்
ஸ்டண்ட் மாஸ்டர் : மான்ஸ்டர் முகேஷ்
பாடல் வரிகள் : கார்த்திக் நேதா
ஆடை வடிவமைப்பாளர் : பிரியா கலையரசன்
VFX : சிவா (HocusPocus)
DI : ராகவன் (லைட்ஸ் ஆன் மீடியா)
ஸ்டில்ஸ் : ராஜா
விளம்பர வடிவமைப்பாளர் : மஞ்சள் பல்
மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏஐஎம்)

