ட்ராமா விமர்சனம்

TURM ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிப்பில், தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், விவேக் பிரசன்னா, சாந்தினி, சஞ்சீவ், ஆனந்த், பூர்ணிமா ரவி, ப்ரதோஷ், மாரிமுத்து, ரமா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “ட்ராமா”.

மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்து வரும் விவேக் பிரசன்னா சாந்தினி தம்பதிகளுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. சாந்தினி தங்களுக்கு ஒரு குழந்தை இல்லை என மனவேதனை அடைந்து கொண்டிருக்கிறார் எப்பொழுதும்.

இதனால் இவர்களின் வீட்டில் ஒரு எப்பொழுதும் ஒரு மன இறுக்கமான சூழலே  இருந்து கொண்டிருக்கிறது. 

இந்த சூழ்நிலையில் நண்பர் ஆனந்த் ஆலோசனைப்படி தனியார் கருத்தரிப்பு மையத்தின் விளம்பரத்தை பார்த்து அங்கு சிகிச்சை எடுக்க செல்கிறார் விவேக் பிரசன்னா. சில நாட்களில் சாந்தினி கர்ப்பம் ஆகிறார். ஆனால் அந்த கர்ப்பத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க மறுபுறத்தில் ஆட்டோ ஓட்டுபவராக வரும் மாரிமுத்துவின் மனைவியாக ராமாவும் மகளாக பூர்ணிமாவையும் இருக்கிறார்கள். 

பூர்ணிமா ரவியை பிரதோஷ் ஒருதலையாக காதலித்து வருகிறார் முதலில் அவரின் காதலை ஏற்க மறுக்கும் பூர்ணிமா ரவி ஒரு கட்டத்தில் அவர் மீது காதல் வயப்படுகிறார். 

இவர்களின் காதல் நெருக்கத்தில் முடிய அதனுடைய விளைவாக பூர்ணிமா கர்ப்பம் ஆகிறார். 

இந்த இரண்டு கதைகளுக்கும் என்ன சம்பந்தம் பூர்ணிமா ரவியின் காதலை அவர்களின் பெற்றோர் ஏற்றுக்கொண்டாரா? இல்லையா?

சாந்தினியின் கர்ப்பத்தில் இருக்கும் சிக்கல் என்ன? என்பதே ட்ராமா படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : தம்பிதுரை மாரியப்பன்

ஒளிப்பதிவு : அஜித் ஸ்ரீனிவாசன் 

இசை : ஆர் எஸ் ராஜ்பிரதாப்

எடிட்டர் : முகன் வேல்

கலை இயக்குனர் : சி கே முஜிபுர் ரஹ்மான்

சண்டை : சுரேஷ்

நடன இயக்குனர் : ஸ்ரீ கிரிஷ்

தயாரிப்பு : TURM ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் எஸ் உமா மகேஸ்வரி 

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்