டிராபிக் ராமசாமி விமர்சனம்

டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை குஷ்பூ வெளியிட சீமான் பெற்றுக் கொள்வதாக படம் ஆரம்பமாகிறது. அப்புத்தகத்தை விஜய் சேதுபதி படிக்க, அது  திரையில் படமாக வருகிறது. டிராபிக் ராமசாமியாக நடித்துள்ள  எஸ்.ஏ.சந்திரசேகர்,  மனைவி ரோகிணி, மகள், மருமகனுடன் வாழ்ந்து வருகிறார். 
கண்முன் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்கிறார். பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார். ஆனால், அவர் கொடுக்கும் புகார்களுக்கு காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்படாததால் நீதிமன்றத்தை அணுகுகிறார்.
சிறிய பிரச்சனைககளுக்காக நீதிமன்றத்தை அணுகும் டிராபிக் ராமசாமிக்கு  வெற்றியும் கிடைக்கிறது. மீன்பாடி வண்டியால் உயிரிழப்பு ஏற்படுவதை கண்கூடாக பார்க்கும் ராமசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். போதிய சாட்சிகள் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
ரவுடியான ஆர்.கே.சுரேஷுக்கும், டிராபிக் ராமசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டு ஆர்.கே.சுரேஷ், ராமசாமிக்கு உதவிகளை செய்கிறார்.
மீன்பாடி வண்டிகளை ஓட்டக்கூடாது என்று சட்டம் உள்ள நிலையில், அதை எப்படி ஓட்டலாம் என்று கோபப்படும் டிராபிக் ராமசாமி, அது பற்றி ஒரு கணக்கெடுப்பும் நடத்தும்போது, அதில் நிறைய பேர் உயிரிழந்துள்ளது தெரிய வருகிறது. அதற்கான ஆதாரங்களை ஆர்.கே.சுரேஷ் மூலம் திரட்டுகிறார்.
இந்த நிலையில், டிராபிக் ராமசாமியை கொல்ல பலரும் முயற்சி செய்கின்றனர். அவர்களிடமிருந்து அவரை ஆர்.கே.சுரேஷ் காப்பாற்றுகிறார். ஒரு சமயத்தில் ஆர்.கே.சுரேஷும் கொல்லப்படுகிறார்.  டிராபிக் ராமசாமி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தப்பித்தாரா? டிராபிக் ராமசாமியின் வழக்குகளுக்கு நீதி கிடைத்ததா? என்பது டிராபிக் ராமசாமி படத்தின் மீதிக்கதை.
டிராபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்ந்துருக்கிறார் என்றே சொல்லலாம். ரோகிணி, ஆர்.கே.சுரேஷ், சேத்தன், இமான் அண்ணாச்சி, அம்பிகா, மனோபாலா, மதன் பாப், என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். குஷ்பு, சீமான், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரின் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளையும் ஏற்பட்ட போராட்டங்களையும் படமாக எடுத்த இயக்குனர் விக்கியை பாராட்டலாம்.
நடிகர்கள்: எஸ்ஏ சந்திரசேகர், ரோகினி, ஆர்கே சுரேஷ், விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, குஷ்பூ, சீமான், அம்பிகா, மனோ பாலா, மற்றும் பலர்
தொழிநுட்ப கலைஞர்கள் :
இயக்குனர்: விக்கி
இசையமைப்பாளர்: பாலமுரளி பாலு
தயாரிப்பாளர்: எஸ்ஏ சந்திரசேகர் க்ரீன் சிக்னல்
பிஆர்ஓ. : சக்தி சரவணன்
டிராபிக் ராமசாமி “ஒரு தனி மனித போராட்டம்”
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்