டுலெட் விமர்சனம்

சர்வதேச திரைப்பட  விருதுகள் முதல் தேசிய விருது வரை பெற்ற திரைப்படம் டூலெட். நாயகன் சந்தோஷ், மனைவி ஷீலா, மகன் தருனுடன்  வசித்து வருகிறார். சினிமா துறையில்  படம் இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில் சந்தோஷை வீட்டை காலி செய்ய சொல்கிறார் ஹவுஸ் ஓனர். 
வீட்டை காலி செய்ய குறிப்பிட்ட காலஅவகாசம் கொடுக்கப்படுகிறது, அதனால்  வாடகைக்கு வீடு தேடி குடும்பத்துடன் அலைகிறார் சந்தோஷ். அவர்களுக்கு வீடு கிடைத்ததா ? எப்படியெல்லாம் வீடு தேடி கஷ்டப்படுகிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
ஷீலாவும், சந்தோசும்  அடித்தட்டு கணவன், மனைவியாக நடித்து இல்லை இல்லை வாழ்ந்து இருக்கிறார்கள். எந்த ஆடம்பரமோ, பாடல்களோ, சண்டை கட்சியோ, பஞ்சு டயலாக்கோ, காமெடி என்ற பெயரில்  இரட்டை அர்த்த வசனங்களோ எதுவுமே இல்லாமல், ரசிகர்களின் மனதை கலங்க வைத்திருக்கிறார் இயக்குனர் செழியன்.
அடித்தட்டு மக்கள் தினம் சந்திக்கும், மேல்தட்டு மக்கள் சந்திக்காத வாழ்க்கை போராட்டமே டுலெட்.