இன்றைய முக்கிய செய்திகள்

 

3 முன்னாள் அமைச்சர்கள் உள்பட 13 அதிமுக எம்எல்ஏக்கள் நடத்திய ரகசிய ஆலோசனையால் எடப்பாடி அரசுக்கு திடீர் சிக்கல்.

முத்தலாக் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வாதங்கள் முடிந்ததையடுத்து தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

கோவையில் இருந்து முதல்வர் கார் மூலமாக உதகை புறப்பட்டு சென்றார் அப்போது பொதுமக்கள் வழிமறித்து மனு கொடுத்தனர்.

பழனிச்சாமி ஆட்சி இன்னும் 2 மாதங்களில் கலைந்துவிடும் என்று மதுசூதனன் தெரிவித்துள்ளார்.மேலும், எடப்பாடி அணியில் உள்ள அதிமுகவினர் தங்களோடு வந்து இணைந்து விடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொடர்ந்த மனு தள்ளுபடி.நாளை காலை பட்டமளிப்பு விழாவில் திட்டமிட்டபடி ஆளுநர் பட்டங்களைவழங்குவார்.

நடிகர் கலாபவன் மணி மரண வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்.

குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை விதித்தது சர்வதேச நீதிமன்றம்.

அமைச்சர் அனில் தவே காலமானதால் அவரிடம் இருந்த பொறுப்பு ஹர்ஷவர்தனுக்கு மாற்றப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச் சூழல் துறையை ஹர்ஷவர்தனன் கூடுதலாக கவனிப்பார் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாபு என்பவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கு விசாரணையின் போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடல் நத்தையை கொடுத்து சசிகலா காலை கழுவி அமைச்சர் பதவியை பெற்ற டைபி ஜெயக்குமாருக்கு அண்ணா திமுக வரலாற்றை பற்றி என்ன தெரியும் என சென்னை விமான நிலையத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் பேட்டி.

நாளிதழ்களில் தேர்வு முடிவுகள் தொடர்பாக விளம்பரம் அளித்தால் நடவடிக்கை: பள்ளிக்கல்வி துறை செயலாளர்.

காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணி கடையில் இருந்து ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூ.500,1000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக மாணவர்கள் மத்தியில் இன்ஜினியரிங் பயிலும் ஆர்வம் குறைக்துள்ளதால் 11 இன்ஜினியரிங் கல்லூரிகள் இழுத்து மூடும் அபாய நிலை உருவாகியுள்ளது.

சென்னையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் மின்சார ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் 2 பேரும், பூங்கா ரயில் நிலையத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

வங்காள தேசத்தில் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கடந்த 2002-ம் ஆண்டில் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 23 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து நாராயங்கஞ் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், அவர்களின் பதுங்கு இடங்களை கண்டுபிடிக்கும் நோக்கிலும் ராணுவத்தினர் அதிரடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

டெல்லி ஐகோர்ட்டில் அருண் ஜெட்லி – ராம் ஜெத்மலானி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. தகராறு எழுந்ததால், விசாரணை பாதியிலேயே முடிக்கப்பட்டது.

வருகிற 1ஆம் தேதி பிரதமர் மோடி, ரஷியாவுக்கு பயணமாகிறார். அப்போது அதிபர் புதினை சந்திக்கும்போது கூடங்குளத்தில் 5, 6-வது அணு மின்நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவில் ஓடும் ரெயிலில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் மனைவியை கீழே தள்ளி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

அந்தமானை நோக்கி காற்று வேகமாக வீசுவதால் சென்னை – கன்னியாகுமரி மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் மர்ம காய்ச்சலால் 7 வயது சிறுமி உயிரிழந்தார்.காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி தரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அரசு தொலைக்காட்சி நிறுவனம் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சயான் கோவை அரசுமருத்துவமனைக்கு மாற்றம் விபத்தில் சிக்கிய சயான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு தலைவர் அய்யாக்கண்ணு மீண்டும் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். 21ம் தேதி டெல்லியில் நடக்கும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அய்யாக்கண்ணு டெல்லி சென்றுள்ளார்.

கன்னியாகுமரி அருகே கீரிப்பாறை மாரமலை சிஎம்எஸ் எஸ்டேட்டில் யானை தாக்கியதில் காவலாளி பலியாகியுள்ளார். யானை தாக்கியதில் காவலாளி ராஜலிங்கம் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் தங்களது குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரசிகர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். அரசியல் பற்றி எதையும் கேட்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் செய்டியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவின் தலைமைச் செயலகத்திலும் ரேன்சம்வேர் இணைய தாக்குதல்: 20 கணினிகள் முடக்கம்.

வேலூர் : அரக்கோணத்தில் சரக்கு ரயில் எஞ்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்தது இரண்டு மணி நேரங்களுக்கு பின்பு தடம் புரண்ட இன்ஜின் சக்கரங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீநகர் : ஜிஎஸ் டி மசோதா கூட்டத்தொடர் ஜம்மு காஷ்மீரில் தொடங்கியது. இரண்டு நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. முன்னதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஜம்மு – காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தியை சந்தித்து பேசினார்.

கரூர் தோகைமலையில் குளத்தை தூர்வாரும் பணியின் போது மு.க ஸ்டாலின் தானே ஜேசிபி இயந்திரத்தை இயக்கினார். அதைக் கண்ட பொதுமக்கள் கோஷம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் மூடப்பட்ட இடங்களுக்கு மாற்றாக வேறு இடங்களில் டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மதுபான் கடைகளை சூறையாடி வருவதால் இது வரை அரசுக்கு ரூ.7 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு: சிபிஎஸ்இ-க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் விவேகானந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட விவேகானந்தன் நம்பியூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அடிதடி வழக்கில் இருந்து மகனை காப்பற்ற சேகர் என்பவரிடம் இருந்து ரூ.50,000 வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீச்சு.

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 123 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம்.

என் நினைவாக மரங்கள் நடுங்கள், நினைவிடம் எதுவும் வேண்டாம் – மறைந்த அமைச்சர் அனில் தவேயின் இறுதி விருப்பம்.