மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வெளியிட்ட ஹபீபி படத்தின் பாடல்

இசைமுரசு நாகூர் E.M ஹனீஃபாவின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிற வேளையில் வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வழங்க, நேசம் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்த எங்கள் ‘ஹபீபி ‘ திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு (A I ) தொழில்நுட்பத்தில் இசைமுரசு நாகூர் E.M ஹனீஃபா அவர்களின் குரலிலில்
யுகபாரதியின் வரிகளில்
சாம் .C.S இசையில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளோம்.

எங்களுடைய இந்த சீரிய முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் இப்படப் பாடலை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களுக்கும், உடனிருந்த அமைச்சர் பெருமக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து உடன்பிறப்புகளுக்கும் பேரன்பும் நன்றியும்!

இப்படிக்கு,
இயக்குநர் மீரா கதிரவன்
மற்றும்
ஹபீபி படக்குழுவினர்.

பாடலின் லிங்க் கீழே இருக்கிறது.

 

கேட்டுவிட்டு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு பகிருங்கள்.