இன்றைய செய்திகள்

டெல்லி தலைமை செயலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவால் கார் திருடப்பட்டுள்ளது.

டெல்லியில் 2008ஆம் ஆண்டு வீட்டில் இளம் பெண் ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனையை ரத்து செய்து பெற்றோரை விடுவித்தது அலகாபாத் நீதிமன்றம்.

நெடுந்தீவு – தலைமன்னார் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.

5 நாள் பரோல் முடிந்ததால் மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார் சசிகலா.

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்.

தமிழ்நாடு அரசு பச்சை நிறத்திலிருந்து காவி நிறத்திற்கு மாறுவது ஏன் என்ற கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளிக்க மறுப்பு.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.

நீர்நிலைகளை காப்பாற்ற தேவைப்பட்டால் கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்கலாம். ஆட்சியர்கள் வழக்கமான பணிகளுக்கு இடையே இயற்கையை பாதுகாக்க நேரம் ஒதுக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்.

தேர்தல் ஆலோசனைகள் பெற சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படும்.வேட்பு மனுதாக்கல் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர் ஏகே.ஜோதி.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களிடம் பணம் பெற்ற 240 தொழிலாளர் பணிநீக்கம் – தேவஸ்தான நிர்வாகம் அதிரடி.

முதல்வர் பழனிசாமியுடன் எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை – ஓ.பன்னீர்செல்வம்.

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க சாணத்தை கரைத்து வாசலில் ஊத்து – அமைச்சர் செல்லூர் ராஜு.

தமிழகத்தின் மின் தேவை குறித்து முதல்வர் அளித்த கடிதத்தை பிரதமரிடம் வழங்கினேன் டெங்கு பரவாமல் தடுக்க தமிழகம் வரவுள்ளது மத்திய அரசின் மருத்துவ குழு – ஓ.பன்னீர்செல்வம்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான உதவிகளை நீதிமன்றம் செய்ய தயார். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற இடையூறு ஏதும் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் – உயர்நீதிமன்றம்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பதுதான் டெங்கு காய்ச்சல் பரவ முக்கிய காரணம் – முக.ஸ்டாலின்.

மெர்சல் படத்துக்கு தடை கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.

மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் -தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்த ஆளும் கட்சி தயாராக இல்லை.கோவை அரசு மருத்துவமனையில் போதிய சுகாதார வசதிகள் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்.

மோடி அரசின் எதேச்சதிகாரத்தால் இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது – வைகோ.

அனைத்துக்கட்சி தலைவர்கள், முதல்வர்களுடன் ஆலோசித்து நாட்டை முன்னேற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – வைகோ.

நடிகர் சந்தானத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

டெல்லியில் மின்துறை அமைச்சருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத வழக்கில் 13 மாவட்ட ஆட்சியர்கள் இனிமேல் ஆஜராவதில் இருந்து விலக்கு வழக்கு நவ.17க்கு ஒத்திவைப்பு – உயர்நீதிமன்றம்.

குஜராத் மாநிலத்தில் 182 சட்டபேரவைத் தொகுதிகளுக்கும், இமாச்சல் பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.

அக்.17 மற்றும் 18ம் தேதிகளில் முதுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு வெடிக்கத்தடை – முதுமலை கள இயக்குநர்.

இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 9ஆம் தேதி வாக்குப்பதிவு, டிசம்பர் 18ல் வாக்கு எண்ணிக்கை : தேர்தல் ஆணையர்.

சிவகாசி அருகே சித்ராஜபுரத்தில் ப்ளுவேல் விளையாட்டால் இளைஞர் தற்கொலைக்கு முயற்சி.

ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் – மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை.

சென்னை செனாய்நகர் திருவிக காலனி குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டதற்கு மெட்ரோ ரயில் காரணமல்ல – மெட்ரோ ரயில் நிர்வாகம்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டார் முக.ஸ்டாலின்.

சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன் ஒக்கூர் அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழப்பு.

மன்னார்குடியில் டெங்கு காய்ச்சலால் 19 வயது மாணவி மதுமதி என்பவர் உயிரிழப்பு.

உரிமைக் குழு நோட்டீஸ்க்கு எதிராக 21 திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு அக்.27க்கு ஒத்திவைப்பு.

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் மின்துறை அமைச்சர் தங்கமணி சந்திப்பு.

சேலம் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலக்கியா என்ற மூன்று வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

சென்னை டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பள்ளிக்கரணையைச் சேர்ந்த விஜயகுமாரி(27) என்ற பெண் உயிரிழப்பு.

ஈரோடு காளிங்கராயன் அணையை சுற்றிப்பார்க்க வந்த சேலம் நெத்திமேட்டைச்சேர்ந்த புஷ்பராஜ் , டான்பிரவின் ஆகிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

15 நாட்களுக்குள் டெங்கு கொசுவை ஒழிக்க துப்புரவுப்பணி செய்ய வேண்டும். மாநகராட்சி ஆணையர், ஆட்சியர்கள் தலைமையில் மேற்கொள்ள முதல்வர் உத்தரவு.

நவ.1ஆம் தேதி டெல்லியில் நியூசிலாந்துக்கு எதிராக கடைசி டி20 ஆட்டம் – ஆஷிஷ் நெஹ்ரா.

இந்திய அணியின் முன்னனி பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவிப்பு.

தண்டனையை ரத்து செய்யக் கோரும் திருச்சி முன்னாள் மேயர் ஆசிக் மீரா வழக்கில் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பதிலளிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் கிளை.