இன்றைய செய்திகள்

இரட்டை இலை சின்னம் விவகாரம். தேர்தல் ஆணையத்திடமிருந்து வாபஸ் பெற்றார் ஜெ.தீபா.

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இறுதி விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து வெளியே வந்தார் தொண்டர்கள் சிறை வாயில் காத்து இருந்து உற்சாக வரவேற்பு.சாலை மார்க்கமாகவே காரில் சென்னை வருகிறார் சசிகலா.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடையில்லை. தினகரன் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

வாக்கி டாக்கி ஊழல் குறித்து விசாரணை நடத்தும்வரை சட்டம் – ஒழுங்கு டிஜிபியை பொறுப்பிலிருந்து விடுவிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் – முக.ஸ்டாலின்.

நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும் என ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் என்னிடம் தெரிவித்திருந்தார் – மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார் பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார். ஆளுநர் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கான தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்படவில்லை என்றால் தமிழக மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் – மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது ஊடகங்களை சந்திக்கக்கூடாது என சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை நிபந்தனை.

தம்மீதான தேசத்துரோக வழக்கை ரத்துசெய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி மனு.

சசிகலா தாமாகவே எந்த அரசியல்வாதியையும் அழைத்து சந்திக்கக்கூடாது வீட்டுக்கு வருபவர்களை சந்திக்க தடையில்லை.

தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை.உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததே டெங்கு காய்ச்சல் பரவ காரணம் – வைகோ.

சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்தது வைத்தது தான் – அமைச்சர் ஜெயக்குமார்.

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் 17,000 அடி உயரத்தில் வெடித்ததில் 7 வீரர்கள் உயிரிழப்பு.

கல்பாக்கம் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் காவல்நிலையம் கட்டப்பட்டதற்கு எதிரான மனு தள்ளுபடி.

பாஜகவுக்குள்ளேயே வாரிசு அரசியல் உள்ளது.ராஜ்நாத், வசுந்தரா ராஜேவின் வாரிசுகள் அரசியலில் உள்ளனர் : கார்த்தி சிதம்பரம்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் ஒகேன‌க்க‌லில் நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை.

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 39 பேர் உயிரிழப்பு.

திருவண்ணாமலை அருகே 2 இளைஞர்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு.

பாலமேடு பகுதியை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி மேனகா வைரஸ் காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரில் கடத்தி வரப்பட்ட மரகதலிங்கம் பறிமுதல்.விபத்தில் கார் சிக்கியபோது போலீசார் பறிமுதல் செய்தனர்.

அணு ஆயுதங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ‘ஐகேன்’ அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.