இன்றைய செய்திகள்

தமிழகத்தில் பத்து இடங்களில் அம்மா பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படும் – அமைச்சர் காமராஜ் அறிவிப்பு.

முதற்கட்டமாக சென்னை, திருச்சி, திருவாரூர், தஞ்சை, கரூர், வேலூர், நாகை, திருப்பூர், மதுரை, சேலம் மாவட்டங்களில் அம்மா பெட்ரோல் பங்க் அமைக்கப்படும் என அறிவிப்பு.

இலங்கையில் உள்ள 135 படகுகள்,11 மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை – பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார்.

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் – ஆந்திர முதலமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.

குடியரசு தலைவர் தேர்தல் பாஜக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் – தம்பிதுரை

மாட்டிறைச்சிக்கு தடை – மத்திய அரசுக்கு எதிராக கேரளா, மேகாலாயாவை தொடர்ந்து புதுச்சேரி பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குல்காமில் 2 லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தகவல்.

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஓபிஎஸ் அணி , சசிகலா அணி கூடுதல் ஆவணம் தாக்கல்.

ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினால் அது பாஜகவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் – திருமாவளவன்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவைக் கோரியது பாஜக.டெல்லியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்துப் பேசினார் வெங்கய்யா.

சென்னை பெசன்ட்நகரில் டிடிவி.தினகரனுடன் 6 அதிமுக எமஎல்ஏக்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

குடியரசுத் தலைவர் தொடர்பாக சோனியாவுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க கோரிக்கை.

கலசப்பாக்கத்தில் வாழை விவசாயிகள் பயனடையும் வகையில் வாழைமொத்தவிற்பனை மையமும், குளிர்பதனக்கிடங்கும் அமைக்க எம்எல்ஏ பன்னீர்செல்வம் கோரிக்கை.

அதிமுக ஆட்சியில் மீனவர்கள் மீது ஒரே ஒரு முறை துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது – பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார்.

கூவத்தூரில் நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை – எம்எல்ஏ கருணாஸ் அறிக்கை.

திமுக ஆட்சியில் மீனவர் மீது பல துப்பாக்கிச் சூடு நிகழ்வு நடந்துள்ளன : பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுகவில்  எந்த பிரிவும் இல்லை, அணியும் இல்லை – உணவுத்துறை  மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் காமராஜ் பேச்சு.

அவை மரபுகளை மீறியதாக  புதுச்சேரி பேரவையில் இருந்து 2 என்ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒருநாள் சஸ்பெண்ட் – சபாநாயகர்  நடவடிக்கை.

ஜனாதிபதி தேர்தல் பற்றி முதலமைச்சர், அதிமுக நிர்வாகிகள் முடிவெடுப்பர் வெங்கய்ய நாயுடுவை நட்பு ரீதியாக சந்தித்தேன் – தம்பிதுரை.

1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முஸ்தபாதோஸா , பைரோஸ்கான் குற்றவாளி; தாகீர் மெர்ச்சண்ட்டையும் குற்றவாளியாக அறிவித்தது மும்பை தடா நீதிமன்றம்.

ஜூன் 21ஆம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி தலைமையில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஐஎஸ். இயக்கத் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார் மேலும் சில பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவிப்பு.

சத்தீஷ்கரில் நக்சலைட் ஒருவர் சுட்டுக்கொலை ஆயுதங்கள் பறிமுதல்.

தமிழக சட்டப்பேரவையில் வரும் 22ஆம் தேதி முற்றுகை போராட்டம் – கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பழனிச்சாமி அறிவிப்பு.

ஜம்மு,காஷ்மீர் – பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் பலி.

அதிமுக எம்.எல்.ஏக்கள் பணப்பேரம் குறித்து நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் – டி.கே.ரங்கராஜன்.

உருகும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்கில் அரிசி தயாரிப்பது சாத்தியமில்லை – அமைச்சர் காமராஜ்

குதிரை பேர வீடியோ விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி ஸ்டாலின் தொடுத்த வழக்கு திங்களன்று விசாரணை – உயர்நீதிமன்றம்

சென்னை பெல்ஸ் ரோட்டில் மாநில கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாட்டம் தடையை மீறி மாணவர்கள் பஸ்டே கொண்டாடி வருகின்றனர்.

பச்சையப்பன் கல்லூரி முதல்வரை மாணவர்கள் தாக்கினார்கள் முதல்வருக்கு மண்டை உடைப்பு – மாணவர்களை சோதனை செய்த போது   திடீர் தாக்குதல் கல்லூரி முதல்வருக்கு மண்டையில் பலத்த காயம் 36 மாணவர்களிடம் விசாரனை நடைபெற்று வருகிறது.