திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
ஜெயலலிதா மரணம் பற்றி அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி கமிஷன் 25 ஆம் தேதி விசாரணை தொடக்கம்.
பேரறிவாளனின் பரோலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி அவரின் தாயார் அற்புதம்மாள் முதல்வருக்கு மனு.
நீலகிரியில் பேப்பர் டம்ளர்கள் பயன்படுத்த தடை – ஆட்சியர் உத்தரவு.
மெர்சல் படத்தை தணிக்கை செய்த குழுவில் இடம் பெற்ற உறுப்பினர்களை நீக்க வேண்டும் : ஹெச்.ராஜா.
மெர்சல் படத்திற்கு அனுமதிஅளித்த அதிகாரிகள் பதவிவிலகவேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளது சரியல்ல – தணிக்கை வாரிய மண்டல தலைவர் மதியழகன்.
மெர்சல் படத்தில் காட்சிகளை நீக்க வேண்டும் என்றால் வாரியத்திடம் மீண்டும் அனுமதி பெறவேண்டும் – தணிக்கை வாரிய மண்டல தலைவர் மதியழகன்.
மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை : மண்டல தணிக்கைக்குழு அதிகாரி மதியழகன்.
மெர்சலுக்கு தணிக்கை சான்று இருந்தால் போதும்; பாஜகவிடம் சான்றிதழ் வாங்கவேண்டிய அவசியமில்லை : திருநாவுக்கரசர்.
பழநி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி மலைக்கோயிலில் நடந்தது.
விஜய், டோட்லா, ஹட்சன் நிறுவனங்கள் தங்களது பால் மாதிரியை பரிசோதித்து 3 மாதத்தில் அறிக்கை தர வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்.
மதுரை அரசு மருத்துவமனை அருகே கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் – அக்.27க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு.
பொறையார் கட்டட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு டிடிவி தினகரன் இரங்கல்.
3 தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதித்த தடை தொடரும் – சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழக அரசின் பாரத் நெட் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து ரூ.1,230 கோடி ஒதுக்கீடு.
சுகாதாரம் இல்லாமல், டெங்கு கொசு வளர காரணமாக இருந்த விக்கிரவாண்டி சுங்கச்சாவடிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
வரும் 23ல் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட முடிவு அறிவிக்கப்படும் – ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சிசுந்தரம்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கர குண்டு வெடிப்பு 30 பேர் பலி.
எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தமிழக அரசுதான் தாமதம் செய்கிறது – இல.கணேசன்.
உலக சுகாதாரத்துறை வழிகாட்டுதல் பின்பற்ற மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் தேறி முரசொலி அலுவலகம் சென்றதில் மகிழ்ச்சி என்றும் விரைவில் முழு உடல்நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் அஜய் என்ற குழந்தை வைரஸ் காய்ச்சலால் உயிரிழப்பு.
கேரளாவில் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் அலட்சியமாக கார் ஓட்டிச் சென்றவர் மீது வழக்குப்பதிவு.