இன்றைய செய்திகள்

நிலவேம்பு கசாயம் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவம், நிலவேம்பு கசாயம் குடிப்பதால் மலட்டுத்தன்மை ஏற்படாது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

நிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது.நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவல்களை பகிர வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி.

அனைத்து ரயில்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டாயம் இருக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்.

நிலவேம்பு கசாயம் குறித்து நடிகர் கமலஹாசன் கூறுவது தவறு.உலகின் பல்வேறு நாடுகளில் நிலவேம்பு கசாயம் காய்ச்சலுக்கு கொடுக்கப்படுகிறது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து வரும் 24-ம் தேதி அறிவிக்கப்படும் – தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழகத்தில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லை, 3 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது – அமைச்சர் காமராஜ்.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெ இடத்தில் இருந்து வெற்றி பெறுவேன்.
டெங்குவை விசயத்தில் சுகாதாரத்துறை செயலற்ற தன்மையில் உள்ளது – ஜெ தீபா.

நிலவேம்பு கசாயம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு அரசு சித்த மருத்துவர்கள் சங்கம் கண்டனம்.

டெங்குவை ஒழிக்க போராடும் நிலையில் நிலவேம்பு குறித்து ஆராயத்தேவையில்லை.
வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார் – இல.கணேசன்.

அரசியலுக்கு வருவதற்காக விஜய் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி , டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் – தமிழிசை சௌந்தரராஜன்.

தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சென்னையில் நேற்று காற்றில் 300 மைக்ரோகிராம் நுண்துகள்கள் அதிகரிப்பு – அமெரிக்க துணை தூதகரம்.

எந்த கசாயத்தையும் அளவாக குடிக்க வேண்டும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு : ஜிகே.வாசன்.

எடப்பாடி அணியில் இணைந்து பணியாற்றுவேன் என நான் சொன்னதில்லை. அதே சமயம் தொண்டர்களும், மக்களும் என்ன விரும்புகிறார்களோ அதன்படி செயல்படுவேன் – ஜெ தீபா.

தஞ்சை ராஜராஜசோழனின் 1032வது சதய விழாவை முன்னிட்டு பெரிய கோயிலில் பந்தக்கால் நடப்பட்டது.29 மற்றும் 30ஆம் தேதிகளில் சதயவிழா நடைபெறவுள்ளது.

ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் – சங்க சிறப்பு செயலாளர் சேகர்.

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் 3 ரவுடிகள் வெடிகுண்டு வீசி கொலை : உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அநேகமாக மதுரையில் அமையவே வாய்ப்புள்ளது : இல.கணேசன்.

 

ஊதிய உயர்வு தொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையருடன், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.

திண்டுக்கல் நாயக்கனூர் பெரியகுளம் பகுதியில் 35 வயது மதிக்கதக்க பெண் எரிந்த நிலையில் சடலம் மீட்பு கொலையா என எரியோடு போலீசார் விசாரணை.

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் : மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதை அடுத்து புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

சென்னையில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தீபாவளியன்று காற்று மாசு அதிகம் – மாசு கட்டுப்பாட்டு வாரியம்.

மகாராஷ்டிராவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் 3ம் நாளாக தொடர்கிறது.

கந்தகார் ராணுவ முகாமில் தலிபான் தாக்குதல் 43 ராணுவ வீரர்கள் பலி.

ராணுவத்தினரையே எனது குடும்பமாகக் கருதி தீபாவளியை கொண்டாடுகிறேன்: பிரதமர் மோடி.

மேற்கு மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

பெசண்ட் நகரில் மாசு குறைவு நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 80 டெசிபல் ஒலிமாசு பெசண்ட் நகரில் குறைந்தபட்சமாக 68 டெசிபல் ஒலிமாசு பதிவு – மாசு கட்டுப்பாட்டு வாரியம்.

ஜம்மு – காஷ்மீர் : எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி.