இன்று தொடங்குகிறது ஜியோ போன் புக்கிங். புதிய சாதனை படைக்கு?

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ. அந்நிறுவனம், கடந்த ஜூலை மாதம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியது. ‘இந்தியாவின் ஸ்மார்ட்போன்’ என்ற விளம்பரத்தோடு அறிமுகமான ‘ஜியோ போன்’ (Jio Phone), 4ஜி உள்பட பல வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.  செப்டம்பர் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போனுக்கான புக்கிங் இன்று தொடங்குகிறது. முன்பதிவு செய்பவர்களுக்கே முதலுரிமை என்பதால், இன்று புக்கிங் செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ஜியோ போன் விற்பனை தொடங்கவிருக்கிறது. ஜியோ நிறுவனத்தின், jio.com இணையதளத்திலும், ஜியோ ஸ்டோரில் நேரடியாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

பெயர், இமெயில் ஐடி மற்றும் மொபைல் போன் போன்ற விவரங்களை அளித்து வாடிக்கையாளர்கள் எளிதாக முன்பதிவு செய்துகொள்ளலாம். ஜியோ போன் டெலிவரிக்குத் தயாரானதும், அந்நிறுவனம் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளும். முன்பதிவு செய்பவர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ஸ்மார்ட்போன் டெலிவரி நேரத்தில் மட்டும் செக்யூரிட்டி டெபாசிட் தொகையான ரூ. 1,500 செலுத்தி ஜியோ போனை பெற்றுக்கொள்ளலாம். மூன்று ஆண்டுகளுக்குப்பின் இத்தொகை வாடிக்கையாளர்களுக்குத் திரும்ப அளிக்கப்படும். நேரடியாக ஸ்மார்ட்போனைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், எஸ்.எம்.எஸ் மூலமாக முன்பதிவு செய்யும் வசதியையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. JP <Area Pin Code> Store Code என டைப் செய்து 7021170211 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், முன்பதிவு குறித்த அப்டேட்கள் அனுப்பப்படும்.