உமாபதி ராமய்யா இயக்கத்தில், நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஸ்ரீதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, ஆதித்யா கதிர், மாறன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் TN 2026.
நாயகன் நட்டி பிழைப்புக்காக வடமாநிலத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார். சென்னையில் குல்கன் குமார் என்ற பெயரில் நடிகராகி விடுகிறார். அவருடைய முதல் படம் மக்களிடையே பெரும் அளவில் வெற்றி பெற்று விடுகிறது. அது மட்டும் இல்லாமல் அவர்தான் அடுத்த எம்ஜிஆர் என்ற இடத்தையும் பெற்று வருகிறார் நட்டி.
தம்பி ராமையா எம்ஜிஆரின் தீவீர ரசிகராக இருக்கிறார் அவர் நட்டியை எம்ஜிஆர் இடத்தில் கண்டிப்பாக பிடிப்பார் என்பதால் அவருக்கான எல்லா உதவிகளையும் செய்து அவரை சினிமாவில் ஒரு பெரிய டாப் நடிகராக்க வேண்டும் என்று அவருக்கு பக்கபலமாக இருக்கிறார்.
அதேபோல நட்டியும் சினிமாவில் உச்ச நடிகராக பலம் வருகிறார். அவரை அரசியல் பேச வைத்து அரசியல் கட்சியையும் தொடங்க வைக்கிறார் தம்பி ராமையா 2026 ஆம் ஆண்டின் அடுத்த முதல்வர் நட்டு விடும் சொல்லி சொல்லி அவரை அரசியலில் பயணிக்க வைக்கிறார் தம்பி ராமையா.
அதன்படியின் நட்டியும் பல்வேறு அரசியல் விஷயங்களை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் நட்டி ஒரு திடீர் முடிவு எடுக்கிறார் அந்த முடிவு என்ன? அதன் பிறகு என்ன நடந்தது? நட்டி முதல்வர் ஆனாரா? இல்லையா? என்பதே TN 2026 படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : கண்ணன் ரவி குரூப்ஸ்
தயாரிப்பாளர் : கண்ணன் ரவி
இணை தயாரிப்பாளர்கள் : தீபக் ரவி
இயக்குனர்: உமாபதி எஸ். ராமையா
இசையமைப்பாளர் : தர்புகா சிவா
ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா
கலை : என்.கே. ராகுல்
நடனம் : சாண்டி, பிரவின் ஜி
சண்டை : மகேஷ் மேத்யூ
பாடலாசிரியர்கள் : கார்த்திக் நேதா, மோகன் ராஜன், விக்னேஷ் ராமகிருஷ்ணா
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
TN 2026 அரசியல் ஆர்வலர்களுக்கு ஒரு அறுசுவை விருந்து.
ரேட்டிங் ⭐⭐⭐⭐


