ஜி.எஸ்.டி.வரிவிதிப்பானது ஜூலை 1 தேதி முதல் நாடுமுழுவதும் அமுலுக்கு வருவதால் எந்த எந்த பொருட்களுக்கு வரி உயரும், வரி குறையும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் இந்துக்களின் புனித ஸ்தலமான திருமலை வெங்கடேசவர பெருமாள் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் விலை உயரும் என்று கூறப்படுகிறது.
மேலும், திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான அறைகளில், 500 ரூபாய்க்கு மேல் கட்டணம் உள்ள அறைகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் சொகுசு வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், கோவில்களில் நடத்தப்படும் தலைமுடி ஏலத்திற்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வரவுள்ள ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் அனைத்து கோயில்களிலும், தரிசன டிக்கெட், மற்றும் பிரசாதங்களின் விலை கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.