எரிக்கல் ஒன்று பூமியை நோக்கி விழுகிறது. எரிக்கல் விழுந்ததால் சிலர் இறக்கின்றனர், பலர் காயமடைந்ததாக கூறப்படுகின்றது. மீண்டும் சக்தி வாய்ந்த எரிக்கல் ஒன்று விரைவில் பூமியை நோக்கி விழ இருப்பதாக விண்வெளியில் கண்டுபிடிக்கப்படுகிறது.
இது விழுந்தால் 4000 கோடி மக்கள் இறந்து பெரிய இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த ராணுவ தளபதி ஜெயப்பிரகாஷ், தன் உதவியாளர்களான நிவேதா பெத்துராஜ், வின்செண்ட் அசோகன் ஆகியோருடன் முயற்சி செய்கிறார். அந்த எரிகல்லை அழிக்க தேவையான உபகரணங்கள் இவர்களிடம் இல்லாததால், வேறு நாட்டுக்கு சொந்தமான விண்வெளியில் இருக்கும் விண்கலத்தை பயன்படுத்தி அழிக்க முடிவு செய்கிறார்கள்.
அந்த நாட்டிடம் கேட்டால் தரமாட்டார்கள் எனக்கருதி திருடி பயன்படுத்திக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். திருடுவதற்கு திறமையான ஆளை தேடி வருகிறார்கள். திருடுவதில் கைதேர்ந்தவனாகவும், மேஜிக் மேனகாவும், மகனை பிரிந்து சிறையில் இருக்கும் ஜெயம் ரவியை தேர்ந்துஎடுக்கிறார்கள்.
ஜெயம் ரவிக்கு மகன் தான் எல்லாம், எங்களுக்கு உதவி செய்தால் தண்டனையில் இருந்து விடுவித்து மகனிடம் சேர்த்து வைப்பதாக சொல்லி ஜெயம் ரவியை அழைத்து செல்கின்றனர். ஜெயம் ரவியும் அதற்கு ஒப்புக்கொண்டு தன் நண்பர்களான ரமேஷ் திலக், அர்ஜுனன் ஆகியோரை அழைத்துக் கொண்டு, நிவேதா பெத்துராஜ், வின்செண்ட் அசோகனுடன் விண்வெளிக்குச் செல்கிறார்.
அப்படி செல்லும்போது ஜெயம் ரவிக்கு மட்டும் கேட்க்கும் வகையில், மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், திருடும் பொருளை தரவேண்டும், இல்லையென்றல் மகனை கொன்று விடுவோம் என்று ஒரு போன் வருகிறது. இதனை கேட்டு அதிர்ச்சி அடையும் ஜெயம் ரவி மகனை காப்பாற்ற என்ன செய்தார்? ராணுவ தளத்திற்கு உதவி செய்தாரா? அல்லது போனில் மிரட்டியவருக்கு பயந்து அவர்களுக்கு துணை போனாரா? என்பது டிக் டிக் டிக் படத்தின் மீதிக்கதை.
ஜெயம் ரவி, மகனுக்காக எதையும் செய்யும் அன்பான அப்பாவாகவும், நாட்டுக்காக விண்கல்லை அழிக்க முயற்சி செய்பவராகவும் சிறப்பாக நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ் ராணுவ அதிகாரியாக நடித்து அசத்தியிருக்கிறார். வில்லன் ஆரோன் ஆசிஸ் அதிரடி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாய் மிரட்டியிருக்கிறார்.வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ஜெயப்பிரகாஷ், அர்ஜுனன் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். விண்வெளி பயணம் என புதிய முயற்சியை எடுத்த சக்தி சவுந்தர்ராஜனுக்கு வாழ்த்துக்கள். குறும்பா பாடல் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது.
நடிகர்கள்: ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயப்பிரகாஷ், அர்ஜீனன், ரமேஷ் திலக், ஜெயம் ரவி மகன் ஆரவ் மற்றும் பலர்.
தொழிநுட்ப கலைஞர்கள்
இயக்கம் – சக்தி சௌந்தர் ராஜன், ஒளிப்பதிவு – வெங்கடேஷ், இசை – இமான்
கலை – எஸ் எஸ் மூர்த்தி, தயாரிப்பு – நேமிசந்த், பிஆர்ஓ. : யுவராஜ்
இயக்கம் – சக்தி சௌந்தர் ராஜன், ஒளிப்பதிவு – வெங்கடேஷ், இசை – இமான்
கலை – எஸ் எஸ் மூர்த்தி, தயாரிப்பு – நேமிசந்த், பிஆர்ஓ. : யுவராஜ்
டிக் டிக் டிக் “புதிய விண்வெளி பயணம்”
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்