கால் டாக்ஸி டிரைவரான நாயகன் ஜெகன், காரில் பணிக்காக பயணிக்கும் ஐடி நிறுவன ஊழியரான கதாநாயகி ஈடனை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், நாயகி ஈடனோ, ஜெகனை கார் ஒட்டுநராக மட்டுமே பார்க்கிறார். இந்நிலையில் நாயகன் ஜெகனுடன் இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு செல்ல வேண்டிய சூழல் நாயகி ஈடனுக்கு உருவாகிறது. இருவரும் இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு செல்லும் போது, வழியில் ஈடனை ஒருவன் கடத்தி செல்கிறான். கடத்தப்பட்ட ஈடனை நாயகன் ஜெகன் காப்பாற்றினாரா? இல்லையா?, ஈடனை கடத்த காரணம் என்ன? கடத்தியது யார்? ஜெகனின் காதலை ஈடன் ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பது தான் ‘துரிதம்’ படத்தோட மீதிக்கதை.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்
நடிகர்கள்
‘சண்டியர்’ ஜெகன் – மாரிமுத்து
ஈடன் – வானதி
ஏ.வெங்கடேஷ் – வானதி தந்தை
பாலசரவணன் – கரிகாலன்
பூ ராமு – மாஸ்டர்
ராமச்சந்திரன் (ராம்ஸ்) – வில்லன்
வைஷாலி , ஸ்ரீநிகிலா , ஐஸ்வர்யா – வானதி பிரண்ட்ஸ்
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் ; சீனிவாசன்
இசை ; நரேஷ்
ஒளிப்பதிவு ; வாசன் & அன்பு டென்னிஸ்
படத்தொகுப்பு ; நாகூரான் & சரவணன்
ஆக்சன் ; மணி
தயாரிப்பு ; திருவருள் ஜெகநாதன்
மக்கள் தொடர்பு ; KSK செல்வா