தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் – முதல்வர் தப்பித்து கொள்ள திமுக மீது பழி – எம்.எல்.ஏ.கீதாஜீவன் குற்றச்சாட்டு
திமுக தலைவர் கருணாநிதி 95வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக நகர செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். நகர மாணவர் அணழ துணை அமைப்பாளர் மயில்கர்ணன் முன்னிலை வகித்தார். இதில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் கலந்து அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வகிகள் ராஜகுரு, சேதுரத்தினம்,அன்பழகன், ராமமூர்த்தி, இந்துமதி, மகேந்திரன், ராசுக்குட்டி,மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகர திமுகவினர் செய்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.கீதாஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கடந்த 22ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுக்கைப்போராட்டம் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட போராட்டம். ஏன் காவல்துறை முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை, மாவட்ட நிர்வாகம் எதற்கும் தயாராகவில்லை, இதனால் வன்முறையினால் 13 அப்பாவி மக்கள் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகி உள்ளனர். காவல்துறை பொறுப்பு முதல்வரிடம் உள்ளது. ஆனால் சட்டமன்றத்தில் துப்பாக்கி சூடு குறித்து தொலைக்காட்சி பார்த்து தெரிந்து கொண்டதாக பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகிறார்.
முதல்வராக உள்ளவருக்கு துப்பாக்கி சூடு நடந்து பற்றி தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறினால் யாரூம் ஏற்றுக்கொள்ள முடியாது,உளவுத்துறை தகவல் கொடுத்து இருக்கும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கும், இருந்தாலும் ஏன் பொறுப்பற்ற முறையில் முதல்வர் பதில் கூறுகின்றார் என்று தெரியவில்லை, இப்படி ஒரு நிகழ்வு நடந்து விட்டது என்பதில் இருந்து தப்பித்து கொள்வதற்கான முதல்வா, திமுக மீதும், தூத்துக்குடி எம்.எல்.ஏ என்பதால் என்மீதும் பழி போடுகிறார்.
நிர்வாக திறமையின்மை, சீர்கேட்டினால் தான் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது, தமிழகத்தில் இது போன்று 23 இடங்களில் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றதாக வருவாய்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக தமிழகத்தில் மக்கள் தன்னொழுச்சியாக போராட்டங்கள் நடத்துவது நிர்வாக சீர்கேடு தான் காரணம், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியானதற்கு இதுவரை குடியரசுத்தலைவரும், பிரதமரும் வருத்தம் தெரிவிக்கவில்லை, சிறுசிறு நிகழ்வுகளுக்கு கூட ட்டூவிட்டரில் கருத்து தெரிவிக்கும் பிரதமர் மோடி இதுவரைக்கு இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கவில்லை, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக போராடினார்.
எந்த அரசியல் கட்சிகளை மக்கள் அழைக்கவில்லை, சிறு, சிறு இயக்கங்கள் மக்களுடன் இணைந்து தான் போராடினர். ஸ்டெர்லைட் ஆலை நிறுவனர் பிரதமர் மோடிக்கு நன்கு அறிமுகவுள்ளவர். 13 அப்பாவி மக்கள் பலியானதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவிக்கவில்லை என்பது வருத்தம் தான், காங்கிரஸ், தி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்திய காரணத்தினால் திமுக சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு எடுத்ததாக தெரிவித்தார்.