தூக்குதுரை விமர்சனம்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு ஆகியோர் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் தூக்குதுரை.

ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், விலை மதிப்பில்லாத கிரீடம் ஒன்றை தங்கள் கட்டிப்பாட்டில் வைத்து தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வருகிறார்கள்.

ஊரில், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஊர் கோவில் திருவிழாவில் மக்களிடம் அந்த கிரீடம் காண்பிக்கப்படும். ராஜ குடும்பத்தின் தற்போதைய தலைமுறையான மாரிமுத்து அந்த கிரீடத்தை பாதுகாத்து வருகிறார்.

அந்த கிரீடத்தை திருடுவதற்காக மகேஷ், பால சரவணன், சென்ராயன் அந்த ஊருக்கு வருகிறார்கள் அப்படி திருடி விட்டு மாட்டிக்கொள்ளும் போது
மாரிமுத்துவிடம் இருக்கும் கிரீடம் போலியானது என்றும், ஒரிஜினல் கிரீடம் அந்த ஊரில் உள்ள பழைய கிணற்றில் இருப்பதும், தெரிய வருகிறது.

ஆனால், அந்த உண்மை தெரிந்த பிறகும், ராஜ குடும்பம் மற்றும் அந்த ஊர் மக்கள் கிணற்றில் இறங்கி கிரீடத்தை எடுக்க பயப்படுகிறார்கள்.
அந்த கிரீடம் எப்படி கிணற்றுக்குள் போனது? கிணற்றில் இருக்கும் இடத்தை எடுக்க அந்த ஊர் மக்கள் ஏன் பயப்படுகிறார்கள்? யார் இறங்கி இந்த கிரீடத்தை எடுத்தார்கள்?
என்பது தான் ‘தூக்குதுரை’ படத்தின் மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : டென்னிஸ் மஞ்சுநாத்

இசை : கே.எஸ். மனோஜ்

தயாரிப்பு : அரவிந்த் வெள்ளைப்பாண்டியன், அன்புரசு

கணேசன்இயக்குனர் : டென்னிஸ் மஞ்சுநாத்
ஒளிப்பதிவு : ரவிவர்மா
இசை : கே.எஸ். மனோஜ்
எடிட்டிங் : தீபக் எஸ் துவாரக்நாத்
கலை : ஜெய் முருகன் & பாக்கியராஜ்
சண்டைக்காட்சிகள் : மான்ஸ்டர் முகேஷ் & ராம் குமார்
பாடல் வரிகள் : அறிவு & மோகன்ராஜன்
ஆடை வடிவமைப்பாளர் : நிவேதா ஜோசப்
காஸ்ட்யூமர் : பாலாஜி
ஒப்பனை : ஏ.பி.முஹம்மது
நடனம் : ஸ்ரீதர்
VFX : அரவிந்த்

ஸ்டில்ஸ் : சாய் சந்தோஷ்

தயாரிப்பு மேலாளர் :மனோஜ் குமார்

தயாரிப்பு நிர்வாகி : பாலாஜி பாபு எஸ்
நிர்வாகத் தயாரிப்பாளர் : ஜெயசீலன்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா
விளம்பர வடிவமைப்புகள் : சபா வடிவமைப்புகள்