இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி ‘800’ படம் குறித்து கூறுகையில், “சில படங்களே திரைப்பட இயக்குநர்களுக்கு முழு திருப்தியைத் தரக்கூடியதாக இருக்கும். இதுபோன்ற படங்கள் அரிதாகவே நிகழ்கின்றன. தனது கனவுகளை நிலைநிறுத்த அனைத்து எல்லைகளையும் தாண்டிய ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்குவதற்கு நான் பாக்கியம் செய்தவனாகவும் ஆசீர்வதித்தவனாகவும் உணர்கிறேன். முத்தையா முரளிதரன் சாரின் ஒரு சிறப்பு என்னவென்றால், அவர் கடல் கடந்தும் ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். அவர் களத்தில் ஒரு மந்திரவாதி. அவரது ஆட்டத்தை எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். தவிர, அவரது பூர்வீகம் தமிழ்நாடு என்பதால், அவரை எப்போதும் தங்கள் ‘மண்ணின் மகன்’ என்றே ரசிகர்கள் கருதினர்.
முரளிதரன் சார் போன்ற ஒரு ஆளுமையை சந்தித்து அவருடன் நேரம் செலவிட்ட தருணங்களே எனக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது. அத்தகைய ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை உருவாக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ‘800’ ஒரு அழகான கதையைக் கொண்டுள்ளது. இது கிரிக்கெட் பார்க்காதவர்களைக் கூட மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும். முத்தையா முரளிதரன் சாரின் வாழ்க்கை மிகவும் ஊக்கமளித்து, ஒவ்வொருவரின் இதயத்திலும் உள்ளத்திலும் ஆழமாகச் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. அதன் மூலம் அவர்களின் இலக்குகளை அடைய அவர்களைத் தூண்டுகிறது. மதுர் மிட்டல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளர் ஜிப்ரான், எடிட்டர் பிரவீன் கே.எல் மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினரும் இந்தத் படத்தை நிறைவேற்றுவதற்கு தூண்களாக இருந்துள்ளனர்” என்றார்.
தாயரிப்பு நிறுவனம் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் பற்றி: “எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய நோக்கம் பார்வையாளர்களின் இதயத்திலும் உள்ளத்திலும் ஊடுருவக்கூடிய நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவதாகும். புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இது பெரிய கேன்வாஸில் சொல்லப்பட வேண்டிய கதை என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்திற்கு தனது இயல்பான நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளார் மதுர் மிட்டல். அக்டோபர் 6 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும்.
நடிகர்கள்: மதுர் மிட்டல், மஹிமா நம்பியார்.
இயக்குநர்: எம்.எஸ்.ஸ்ரீபதி,
தயாரிப்பு: மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ்,
இசையமைப்பாளர்: ஜிப்ரான்,
ஒளிப்பதிவாளர்: ஆர்.டி.ராஜசேகர் ஐ.எஸ்.சி,
எடிட்டர்: பிரவீன் கே.எல்,
திரைக்கதை: எம்.எஸ்.ஸ்ரீபதி & ஷெஹான் கருணாதிலக,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: விதேஷ்,
ஆடை வடிவமைப்பாளர்: பூர்த்தி பிரவின் / விபின் PR,
தோற்ற வடிவமைப்பாளர்: அனிதா மட்கர்,
ஆக்ஷன்: டான் அசோக்,
ஸ்போர்ட்ஸ் கோரியோகிராஃபி: துருவ் பஞ்சாபி,
VFX மேற்பார்வையாளர்: ஜிதேந்திரா.