நம் இந்திய நாட்டின் மிகஉயரிய பொக்கிஷமான திருக்குறளை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் அனிமேடட் வீடியோஸ் வடிவில் சென்னை மேஜிக்கல் 7 ஸ்டுடியோஸ் உருவாக்கி வருகிறது. சர்வதேச திருக்குறள் அமைப்பு, மற்றும் மேஜிக்கல் 7 ஸ்டுடியோஸ் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்த முயறிச்சியில் ஈடுபட்டு வருகிறது.
சர்வதேச திருக்குறள் அமைப்பின் தலைவர் மற்றும் குளோபல் ரெயின்போ பவுண்டஷன் டிரஸ்ட் நிறுவனர் ஆறுமுகம்பரசுராமன், மேஜிக்கல் 7 ஸ்டுடியோஸ் நிறுவுனர் சரவணன் சுந்தரமூர்த்தி,லக்ஷ்மன் சுருதி நிறுவனத்தின் இயக்குனர் லக்ஷ்மணன்ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
நம் இந்திய நாட்டின் மிகஉயரிய பொக்கிஷமான திருக்குறளை, உலகக் குழந்தைகள் அனைவருக்கும்உரிய முறையில் கொண்டு சேர்க்க தமிழ்மற்றும் இருபது உலக மொழிகளில்(அரபு, பெங்காலி, பிரஞ்சு, குஜராத்தி, இந்தி, இத்தாலியன், ஜப்பானிய,கொரிய, மாண்டரின், பஞ்சாபி, ரஷ்ய, ஸ்பானிஷ், தமிழ்,தெலுங்கு, மராத்தி, ஜாவானீஸ், ஜெர்மன், துருக்கிய, மலாய், வியட்நாமிய), அனிமேடட்வீடியோஸ் வடிவில் உலக சுகாதாரஅமைப்பின் (WHO) பரிந்துரைப்படி மேஜிக்கல் 7 ஸ்டுடியோஸ் -ஆல் உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும்லக்ஷ்மன் சுருதி லக்ஷ்மணன் அவர்கள்திருக்குறளைக் கலை வடிவில் நாட்டியநாடகமாக உருவாக்கி வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளார்.