ஓரு விபத்தில் அம்மாவையும், தங்கையையும் இழந்த பழம் (திருச்சிற்றம்பலம் ஜூனியராக தனுஷ்) இந்த விபத்துக்கு அப்பாவான இன்ஸ்பெக்டர் நீலகண்டன் (பிரகாஷ்ராஜ்) தான் காரணம் என்று கூறி அப்பா பிரகாஷ்ராஜுடன் பேசாமல் அவ்வப்போது சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் மகன் பழம் (திருச்சிற்றம்பலம் ஜூனியர் தனுஷ்), தாத்தா திருச்சிற்றம்பலம் சீனியருடன் (பாரதிராஜா) அரவணைப்பில் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். பள்ளி கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், ஆன்லைன் உணவு டெலிவரி பாயாக வேலை செய்யும் தனுஷை நண்பர்கள் பலரும் பழம் பழம் என்று கிண்டல் செய்கின்றனர். வெளியில் எது நடந்தாலும் தனது சிறுவயது தோழியான ஷோபனாவிடம் (நித்யா மேனன்) பகிர்ந்து கொள்கிறார் பழம். அவர் வாழ்க்கையில் அனுஷா (ராஷி கண்ணா) மற்றும் ரஞ்சனி (ப்ரியா பவானி சங்கர்) ஆகிய இரண்டு பெண்களிடம் அவர் காதல் வயப்படுகிறார். பழத்தின் காதலுக்கு அவரது தோழியான ஷோபனா உதவுகிறார். இந்நிலையில் திடீரென பிரகாஷ்ராஜ்ஜிற்கு பக்கவாதம் வந்துவிட, அப்பாவுக்கு துணைவனாக மாற வேண்டிய சூழல் ஏற்படுகிறது பழத்திற்கு. தான் காதலித்து இரு பெண்களும் தன்னை காதலிக்கவில்லை என்று புலம்பும் பழத்திடம், அவரது தாத்தா திருச்சிற்றம்பலம் (பாரதிராஜா)சிறு வயதில் இருந்து தோழியாக இருக்கும் ஷோபனாவை கை காட்டுகிறார். அதற்கு பிறகு என்ன நடக்கிறது? தனது காதலை ஷோபனாவிடம் கூறினாரா? அப்பாவுக்கும் பிள்ளைக்குமான உறவு என்ன ஆனது? என்பதே படத்தோட மீதிக்கதை.
நடிகை-நடிகர்கள்:
தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, முனீஷ்காந்த் ராமதாஸ், அறந்தாங்கி நிஷா, ஸ்ரீரஞ்சினி, மு.ராமசாமி, ஸ்டண்ட் சில்வா, விஜே பப்பு. ரேவதி மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு : சன் பிக்சர்ஸ் நிறுவனம்
இயக்கம் : மித்ரன் ஆர் ஜவஹர்
ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்
படத்தொகுப்பு : பிரசன்னா
இசை : அனிருத்
மக்கள் தொடர்பு : ரியாஸ் அகமது