திரு. மாணிக்கம் விமர்சனம்

ஜிபிஆர்கே சினிமாஸ் சார்பில், ஜிபி ரேகா ரவிக்குமார், சிந்தா கோபால கிருஷ்ணா ரெட்டி, ராஜா செந்தில் தயாரிப்பில், நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, கருணாகரன், இளவரசு, தம்பி ராமையா, நாசர், சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, கிரேஸி ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் திரு. மாணிக்கம்.

சமுத்திரக்கனி குமிளியில் மனைவி அனன்யா மற்றும் இரு மகளுடன் எளிமையான அழகான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

குமுளி பேருந்து நிலையத்தில் லாட்டரி கடை ஒன்றை நடத்தி வருகிறார் சமுத்திரகனி. தன்னுடைய இரண்டாவது மகளுக்கு சரளமாக பேசுவதில் பிரச்சனை இருப்பதால் மருத்துவரிடம் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள் அதனை சரி செய்ய மருத்துவர் இரண்டு லட்சம் வரை ஆகும் என்று சொல்கிறார் அது மட்டும் இல்லாமல் கடன் பிரச்சனையுடனும் வாழ்ந்து வருகிறார்.

எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நேர்மையான முறையில் வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி.

பேருந்து நிலையத்தில் பாரதிராஜா தன் மகளுக்கு வரதட்சணை கொடுக்க முடியாமல் தன் மகள் வீட்டில் வந்து இருப்பதை நினைத்து வருந்தி கொண்டிருக்கும் வேளையில் சமுத்திரகனியின் லாட்டரி கடையில் ஒரு லாட்டரி சீட்டை வாங்குகிறார். தன்னிடம் இருந்த பணம் தொலைந்து விட்டதால், இரண்டு நாளில் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி சமுத்திரகனியிடமே அந்த லாட்டரி டிக்கெட்டை வைத்திருக்குமாறு சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

அதன்படி சமுத்திரகனியும் அந்த லாட்டரி சீட்டை தனியாக எடுத்து வைத்து விடுகிறார். பாரதிராஜா வாங்கி சமுத்திரக்கனியை எடுத்து வைக்க சொன்ன லாட்டரி சீட்டுக்கு ஒன்றரை கோடி பரிசுத்தொகை விழுகிறது.

நேர்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் சமுத்திரக்கனி அந்த லாட்டரி சீட்டை பாரதிராஜாவை தேடி கண்டுபிடித்து கொடுப்பதற்காக செல்கிறார்.

ஆனால் மனைவி அனன்யாவோ அவர்தான் அந்த லாட்டரி சீட்டை காசு கொடுத்து வாங்க வில்லையே உங்களிடமிருந்து, அதனால் நாமலே அதை வைத்துக் கொள்ளலாம் நமக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறது என்று சமுத்திரக்கனியிடம் சொல்கிறார். ஆனால் சமுத்திரகனியோ முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

அது மட்டும் இல்லாமல் சமுத்திரக்கனிக்கு பலவிதமான பிரச்சனைகளும் ஏற்படுகிறது அந்த பிரச்சனைகளை எல்லாம் சமுத்திரக்கனி எவ்வாறு சமாளித்தார்? பாரதிராஜாவிடம் அந்த லாட்டரி சீட்டை ஒப்படைத்தாரா? இல்லையா? என்பதை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கும் படமே திரு.மாணிக்கம்

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு நிறுவனம் : ஜிபிஆர்கே சினிமாஸ்
தயாரிப்பாளர் : ஜிபி ரேகா ரவிக்குமார், சிந்தா கோபால கிருஷ்ணா ரெட்டி, ராஜா செந்தில்
பாடல் வரிகள் : சினேகன், ராஜு முருகன், இளங்கோ கிருஷ்ணன், சொர்க்கோ
இசை : விஷால் சந்திரசேகர்
எடிட்டர் : குணா
கலை இயக்குனர் : சாஹு
எடிட்டிங் சூப்பர்வைசர் : ராஜா சேதுபதி
டைரக்ஷன் டீம் : சுபாஷ்.கே, சதீஷ் பாலா, கார்த்திக் காமராஜ், தேனா சக்திவேல், ஜெய்சங்கர்.பி.
ஒப்பனை : ஜி.சுரேஷ் குமார்
அணிகலன் : ஆர்.முருகன்
சண்டைக்காட்சி : தினேஷ் காசி
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

ரேட்டிங் 3.5/5