‘திரையின் மறுபக்கம்’ விமர்சனம்

360 டிகிரி – நிதின் சாம்சன் தயாரிப்பில், நிதின் சாம்சன் இயக்கத்தில், முகமது கவுஸ், நடராஜன் மணிகண்டன், ஹேமா ஜெனிலியா, நிதின் சாம்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திரையின் மறுபக்கம்’.

ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார், தீவிர சினிமா ரசிகரான விவசாயி சத்யமூர்த்தி. அவரின் ஆசையை பயன்படுத்தி கொண்டு இயக்கவே தெரியாத உதவி இயக்குநர் செந்தில், அவரை தயாரிப்பாளராக்கி திரைப்படம் ஒன்றை இயக்குகிறார்.

படத்தை முடித்து வியாபார பணியை செய்ய ஆரம்பிக்கும் போது, படம் சரியாக இல்லாததால், விலைக்கு போகாது என்று சொல்வதுமட்டுமில்லாமல், கூடுதலாக சில காட்சிகளை சேர்த்தால் மட்டுமே படம் வியாபாரமாகும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறார்.

ஏற்கனவே, நிலத்தை விற்று, சொந்த வீட்டை அடமானம் வைத்து படம் தயாரித்திருக்கும் சத்யமூர்த்தியால் தொடர்ந்து பணம் செலவு செய்ய முடியாமல் கஸ்ட்டப்படுகிறார்.

இதற்கிடையே, கடன் கொடுத்த பைனான்சியர் பணம் கேட்டு மிரட்ட, எப்படியாவது படத்தை வெளியிட வேண்டும் என்று போராடும் சத்யமூர்த்தி மீண்டும் பல லட்சங்கள் கடன் வாங்கி படப்பிடிப்பை நடத்தி படத்தை முடிக்கிறார். அதன் பிறகும் வியாபாரத்தில் பல பிரச்சினைகளையும், சிக்கல்களையும் சந்திக்கும் சத்தியமூர்த்தி கடைசியில் படத்தை ரிலீஸ் செய்தாரா? இல்லையா? என்பதே ‘திரையின் மறுபக்கம்’ படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : 360 டிகிரி – நிதின் சாம்சன்

இயக்கம் : நிதின் சாம்சன்

இசை : அனில் நலன் சக்ரவர்த்தி

மக்கள் தொடர்பு : சிவா